பக்கம்:சித்தி வேழம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சித்தி வேது ம் கைகூடி முருகனது தோற்றம் அவன் நெஞ்சில் சிதையாது இருக்கும்போது அவன் உணர்ச்சி ஒடுங்கி இருக்கும். அப்போது சமாதி கிலே கைகூடும். அதற்கு அப்பால் மெல்ல மெல்லப் பக்குவம் இயைந்து அதுபவ இன்பக் கடலில் வீழ்ந்து விடுவான். - இதைப் பல்வேறு இடத்தில் அருண்கிரியார் சொல்கிருச். "நான் பரமானந்த சரகரத்தைக் கண்டேன்’ என்கிருர். அந்தச் சாகரம் எங்கேயிருந்து வந்தது: "என் புத்தியில் சிறிய ஊற்ருகத் தோன்றியது. வாழ்க்கையில் ஒரு பகுதி யாக, இடம், காலம் ஆகிய எல்லேக்குள் அடங்கிய என் புத்தியில் தோன்றிய பக்தியாகிய உணர்ச்சி, மெல்ல மெல்ல வளர்ந்து எல்லேகளே உடைத்து எல்லேயைத் தாண்டிய பரமானந்தக் கடல் ஆகிவிட்டது.' - . "பத்தித் திருமுகம் ஆறுடன், பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுது கண்டேன்; செயல் மாண்டு - (அடங்கப் புத்திக் கமிலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே' என்று அலங்காரத்தில் பாடுகிருர், அதனுடைய தோற்ற கிலே, புத்திக் கமலத்தில் புறப்படும் உருக்கம். அதன் முடிவு, புவனங்களே எற்றி அகண்டமாக இருக்கின்ற ஆனந்தக்கடல். புத்திக் கமலத்திலே தோற்றிய தோற்றம் அநுபவத்தின் முளே. பரமானந்த சாகாந்தான் அதன் முடிவாகிய கனிச்சுவை. பருப்பொருளாகத் தோன்றிய ஒன்று துண் பொருளாகப் பரவுகிறது. நினைப்பாகத் தோற்றிய ஒன்றை, இன்ப அநுபவத்திற்கு மூலமாகத் தோற்றிய பக்தி என்று சொன்னல், முடிவைச் சித்தி என்று சொல்ல வேண்டும். இறைவ்ன் திருவருளால் முதலில் முளையாகத் தோற்றிய அதுவே வளர்ந்து மரமாகிவிடுகிறது. பக்தி சித்திக்கு வழி என்று சொல்பவர் பிறர் பக்தியே சித்தியாகிவிடுகிறது . என்பது அருணகிரியார் கொள்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/38&oldid=825766" இலிருந்து மீள்விக்கப்பட்டது