பக்கம்:சித்தி வேழம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 33 'பக்தி சித்திகாட்டி அத்தர் சித்தம் மீட்ட பக்தருக்கு வாய்த்த பெருமாளே!' என்பது ஒரு திருப்புகழ். வள்ளி யெம்பெருமாட்டி தவம் செய்யவில்லை; சாதன வகையில் ஈடுபடவில்லை. அவள் நெஞ்சில் முருக பக்தி இருந்தது. ஆனால் அந்தப் பக்தி ஞான வைராக்கியமாக வளரவில்லை. இந்திரிய நிக்கிரகமாக மாறவில்லை. வேடர் குலத்து உதித்த மங்கை ஆதலால் வேடர்களுக்குத் தெய்வமாகிய முருகனே கினேந்து கினைந்து ஆலோலம் பாடித் தினேப்புனம் காத்து வந்தாள். அவளுடைய உள்ளத்தில் பக்தி என்ற ஒன்று சிறிய வித்தாகத் தோன்றியது. அந்த வித்துக்கு நீர் பாய்ச்சியோ உரம் ஊட்டியோ வளர்க்கும் முயற்சியில் அவள் ஈடுபடவில்லை. ஆனல் கருணப்பிரானகிய கந்தவேள் அவ் வித்து முளைத்து, வளர்ந்து, தழைத்து, மரமாகிக் கனி குலுங்க வேண்டு மென்று திருவருள் கொண்டான். வித்தை அவளாக வளர்ப்பதைக் காட்டிலும் தானே சென்று வளர்த்தால் கிச்சய மாகப் பலன் தரும் என்ற கினப்புப் போலும். அவன் இந்திர குமாரி இருக்கவும், 'கலாமயில் கூத்தயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய்ச் சிறு குறவர் மகளாகிய வள்ளியெம் பெருமாட்டிக்குச் சலாமிடற்கு ஏக்கற்று நின்ருன். தன் கருணேப் பிரவாகத்தினால் வித்தாக இருந்த வள்ளியின் பக்தியை வளரச் செய்து கனி கிடைக்கச் செய்தான். 。 - வள்ளியெம்பெருமாட்டியின் திருமணம் முருகனுடைய பெருங் கருணையைக் காட்டும் திருவிளையாடல். முருகனே நினைந்து உருகத் தொடங்கினல் அந்த உருக்கம் பெருக்க மாகிப் பரமானந்த சாகரத்தை மடுக்கச் செய்யும் என்பதை அந்தத் திருமணம் காட்டுகிறது. இதை அருணகிரியார் சொல்கிருர். - • , - "நாதா, குமரா, நம என்று அரஞர் . ஒதாய் என ஒதியது எப்பொருள்தான்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/39&oldid=825767" இலிருந்து மீள்விக்கப்பட்டது