பக்கம்:சித்தி வேழம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சித்தி வேழம் என்று ஒரு கேள்வியைப் போட்டார். சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளைச் சொன்னன் என்று கதை சொல் கிறது. அதை மாத்திரம் முருகன் சொல்லவில்லை. தன் அவதார விசேஷத்தையும் எடுத்து நுட்பமாகச் சொன்னன் என்றும் தெரிகிறது. "வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு ஈத்த" என்று ஒரிடத்தில் வருகிறது. ಹ೮ಔT மிகுதியாலே பள்ளத்தில் கிடப்போரையும் எடுத்துக்கரை ஏற்ற வந்த அவதாரம் முருக அவதாரம். கருணே ஓடிக்கொண்டிருந்தது. அது மிகுதியாக ஆகவேண்டு மென்று கருணகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு முருகன் எழுந்தருளினன். கருணே கூர்தலாவது, கருணை பெறுவோரின் முயற்சி மிகச் சிறியதாக இருக்கவும் கருணை தருவோரின் முயற்சி பெருகி இருத்தல். இதை வள்ளி யெம்பெருமாட்டியை ஆட்கொண்ட நிகழ்ச்சியில் வைத்துக் காட்டினன், முருகன். குற்றங்கள் இருந்தாலும் மறந்து, அன்பு வித்துத் தோன்றிய இடத்தில் அதை வளரச் செய் கின்ற பேரருளே வழங்குதற்கு நான் பிறந்தேன்’ என்ற உண்மையை அவன் சிவபெருமானிடத்தில் சொன்னன். வள்ளி சன்மார்க்கம் என்பது அதுதான். அதனால், "நாதா குமரா நமஎன்று அரஞர் ஒதாய் என ஒதியது எப்பொருள்தான்? என்ற கேள்வியைக் கேட்டவர், அதற்குரிய விடையை நேராகச் சொல்லவில்லே. குறிப்பாகப் பின் இரண்டு அடிகளில் அதனே உணர்ந்து கொள்ளும்படியாக வைத்திருக் கிருர். - வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் - ப்ாதா, குறமின் பதசேகரனே' - - - - - என்று பேசுகிருர். "குறத்தியின் பாதத்தைத் தலயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/40&oldid=825769" இலிருந்து மீள்விக்கப்பட்டது