பக்கம்:சித்தி வேழம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 35 வைத்துக் கொள்ளும் பெருமானே!” என்று முடிக்கிருர். அதைேடு, "பிரம்மா முதலிய தேவர்கள் உன்னுடைய பாதத்தைத் தங்கள் தலையில் சூட்டிக்கொண்டிருப்ப, நீ சின்னஞ் சிறு குறத்தியின் காலே உன்னுடைய த&ல்யில் வைத்துக் கொள்கிருயே” என்று முருகனைப் பார்த்துச் சொல்கிருர், சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது என்ன? வள்ளியெம்பிராட்டியை வணங்கின பெருமானே என்று வந்துள்ள பாடலைப் பார்த்தால் இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு இல்லே போலத் தோன்றும். ஆனல் சிவபெருமானுக்குச் சொன்னதே, "நான் வள்ளியை வணங்கப் போகிறேன்' என்பதுதான். 'இந்த அவதாரத்தில் வித்து மாத்திரமே நோக்கி, பக்குவம் நோக்காமல் அருள் செய்யும் பண்பு என்னிடத்தில் உண்டு என்பதைச் சிவபெருமானுக்கு அறிவித்தான் என்பது அருணகிரியார் கருத்தாக இருக்க வேண்டும். சிவபெருமானுக்கு இந்த முறையைச் சொன்னதோடு அல்லாமல் தமக்கும் இந்த இரகசியத்தைச் சொன்னதாக அருணகிரியார் அலங்காரத்தில் பாடுகிருர். "கின்னம் குறித்து அடி யேன்செவி நீஅன்று கேட்கச்சொன்ன குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது; கோடுகுழல் சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னம் குறிச்சியில் சென்றுகல் யாணம் முயன்றவனே.” 'யான் பலவகையாகத் துன்பப்பட்டேன். முற்பிறவியில் செய்த வினைகளின் பயனகத் துன்புற்றது ஒரு பங்கு. இனி எம்பெருமானின் திருவருளே எவ்வாறு பெறுவது என்ற கவலையாலேயும் மிக்க துன்பப் பட்டுக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/41&oldid=825770" இலிருந்து மீள்விக்கப்பட்டது