பக்கம்:சித்தி வேழம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சித்தி வேழம் இறைவன் திருவிருளேப் பெறுவதற்குப் பலவகையான நெறிகளைச் சொல்கிருர்கள். பல நூல்களும் உள்ளன. அந்த நெறிகளில் புகுவதற்கு உரிய தகுதி என்னிடத்தில் சிறிதும் இல்லையே! அப்படி இருக்க நான் எவ்வாறு முருகன் திருவருளேப் பெறுவேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந் தேன். நான் பட்ட கவலேயை எம்பெருமான் குறித்துக் கொண்டு, இவனுக்கு வலிய அருள் செய்வேன்' என்று வந்தான். என் செவியில் தன் அவதார இரகசியத்தைச் சொன்னன். நான் உனக்கு அடிமை என்ற கினேவை மாத்திரம் கொண்ட என் செவியில் கேட்கும்படியாகச் சொன்ன இரகசியத்தைக் குறிச்சி வெளியாக்கிவிட்டது” என்கிருர் குறிச்சி என்பது வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த குறிஞ்சி கிலத்து ஊர். எப்படி வெளியாக்கிவிட்டது என் பதைப் பின் இரண்டு அடிகளில் சொல்கிருர். "வள்ளியெம் பெருமாட்டியிடம் சென்று அவளேக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முயன்றவனே என்று கூறுகிருர் என் செவி கேட்கச் சொன்ன இரகசியத்தை வள்ளி திருமணம் வெளியாக்கி விட்டது என்று அவர் கூறுகிருர். அருணகிரி நாதர் திருச் செவியில் சொன்ன இரகசியம் எதுவோ, அது தான் சிவபெருமானின் காதிலே பிரணவப் பொருள் விளக்கத்துக்குப் பின் சொன்னதாக இருக்க வேண்டும். இதுவே அருணகிரியார் திருவுள்ளம். வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு ஈத்த’ என்ற திருப் புகழ்ப் பகுதியும், "செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது' என்ற அலங்காரப் பகுதியும், "காதா குமரா நம' என்ற அநுபூதிப் பாட்டும் இந்தக் கருத்தைக் குறிப்பாக வெளியிடுகின்றன. எனவே, அருணகிரியார் திருவுள்ளம் யாது? வள்ளி திருமணத்தின் தத்துவம் என்ன? இந்த இரண்டு கேள்வி களுக்கும் ஒரே விடைதான் உண்டு. “பாசக் கட்டில் கட்டுப் பட்டிருக்கின்ற ஆன்ம் தன்னுடைய உள்ளத்தில் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/42&oldid=825771" இலிருந்து மீள்விக்கப்பட்டது