பக்கம்:சித்தி வேழம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாவின் திருவுள்ளம் - 37 அன்பைக் கொண்டு முருகா என்று சொல்லி உள்ளம் உருகினல் முருகப் பெருமான் அந்த அன்பை ஏற்றுக் கொண்டு, அந்த ஆன்மாவைப் பிரபஞ்சச் சேற்றினின்றும் எடுத்துத் தன் திருவடித் தாமரையோடு ஒன்ற வைக்கும் பெருங் கருணே படைத்தவன். இந்த நம்பிக்கையைக் கொண்டு வாழ்வது அருணகியார் சொல்கின்ற பக்தி நெறி. ஒவ்வொரு கிலேயிலும் ஒவ்வொரு வகையான நெறியைப் பின்பற்றி வாழ்வதிலும் தாம் க்டைப்பிடித்த ஒரு நெறியே மேலும் மேலும் வளர்ந்து பயன் தரும்படி அமையும் என்பதே அருணகிரியார் காட்டும் பக்தி நெறி. r நாரதர் பத்தி சூத்திரத்தில் பக்தியைப் பற்றிச் சொல்லும் போது 'தத் பலத்வாத்' என்று வருகிறது. பக்தி என்பது ஒரு கருவியாகவும் முத்தி என்பது ஒரு பயனுக வும் இருப்பதாக நினைக்கும் நினைப்பை அந்தச் சூத்திரம் மாற்றுகிறது. பக்தியே முடிந்த முடிவாகிய பலகை நிற்கும் என்பது அந்தச் சூத்திரத்தின் கருத்து. அந்த வகையில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் நிச்சயமாக அத்தகைய அநுபவம் பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டித் தம்முடைய அற்புதமான திருவாக்கினலே வற்புறுத்திய பெருங் கருணையாளர் அருணகிரியார். பக்தியிலே தொடங்கி, பக்தியிலே விளங்து, பக்தியிலே மடங்கி, பக்தியிலே இன்பம் பெற்றுக் கரைவதுதான் அருணகிரியார் திருவுள்ளம். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/43&oldid=825772" இலிருந்து மீள்விக்கப்பட்டது