பக்கம்:சித்தி வேழம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால தரிசனம் முருகன் தன் அன்பர்களுக்கு என்றும் துணையாக நிற்ப வன். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் முன்கின்று காப் பவன். உயிர்களுக்கு வரும் துன்பங்களில் மிகப் பெரிது இறப்பாகிய துன்பம். “காலன் வரும்போது என்ன துன்பம் உண்டாகுமோ?” என்று கதறி அழுத மக்கள் பலர். யமபயம் உண்மையில் ஒருவனுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டால் அவன் உடனே அந்தப் பயத்தைப் போக்கிக்கொள்ளும் வழி என்னவென்று ஆராய்வான். இறைவனேப் புகல் புகுவது ஒன்றுதான் அதற்குப் பரிகாரம் என்பதை உணர்ந்து பக்தி செய்ய முற்படுவான். . "ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன்" என்று அருணகிரிநாதர் கூறுகிருர். முருகனே வழிபட்டு அன்பு நெறியில் நிற்பவருக்கு யமபயம் இல்லை என்பதைப் பல இடங்களில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிரு.ர்.

  • . "காலாயுதக்கொடியோன் அருளாய கவசம் உண்டு என்

பால் ஆயுதம் வருமோ யமனுேடு பகைக்கினுமே” என்று படர்க்கையிலும், . "வாராது.அகல் அந்தகா வந்த போதுயிர் வாங்குவனே' . く હઃ 'கட்டிப் புறப்படடா சக்தி வாள் என்றன் கையதுவே" 'திண்டாட வெட்டி விழவிடுவேன்" என்று முன்னிகலயிலும் வைத்துப் பாடுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/44&oldid=825773" இலிருந்து மீள்விக்கப்பட்டது