பக்கம்:சித்தி வேழம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால தரிசனம் 39 உடம்பு எடுத்த உயிர்கள் இறந்துபடுவது உறுதி. ஆனல் மரணத்தில் இரண்டு விதம் உண்டு. பிறக்கும் பொருட்டு இறப்பது, மீட்டு இங்கு வாராமல் வீட்டின்பத்தை அடைய இறப்பது என்பன அவை. இறைவனுடைய திரு வருள் பெற்று வாழ்பவர்கள் உடம்பை விடும்போது விடுதலே பெற்றவராகி அவனடியை அடைகிருர்கள். மற்றவர்கள் வேறு பிறவியை எடுக்கிருர்கள். * நல்ல ஆன்மாக்கள் உயிர்விடும்போது அவர்கள் உயிர் களே இறைவனுடைய ஏவலாளர்களாகிய கணங்கள் வந்து அழைத்துச் செல்லும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வுயிர்கள் மரணத்தால் துன்பம் அடையாமல் இன்ப வாழ்வின் தலவாசல் திறந்தது போன்ற சிலேயை அடை வதையே அப்படிச் சொல்லியிருக்கிருர்கள். அதற்கு நேர் மாருக, அருள்பெரு உயிர்களே, மீட்டும் பிறக்க வேண்டி யிருக்கும் ஆன்மாக்களே, கால தூதுவர்கள் அழைத்துச் செல்ல வருவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் மேலும் துன்புறும் நிலையில் உள்ளவை அவ்வுயிர்கள் என்பதையே அது குறிக்கின்றது. - முருகனுடைய திருவருளேப் பெருதவர்கள் உயிர் விடும் போது காலனுடைய தரிசனத்தைத்தான் பெறுவார்கள். அருள் பெற்றவர்களோ முருகன் தரிசனத்தைப் பெறுவார் கள். காலன் தரிசனமும் வேலன் தரிசனமும் அந்த ஆன்மாக். கள் இந்த உலக வாழ்வில் செய்த செயல்களைப் பொறுத்தே கிடைக்கின்றன. - - "முருகனுடைய அடியார்களுக்கு உயிர்விடும் காலேயில் கால தரிசனம் இராது" என்று சொல்வதுதான் பொருத்த மாக இருக்கும். அருணகிரிநாதர் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழில் ஒரிடத்தில் இதற்கு மாருன பொருள்கொள்ளும் வகையில் ஒரு பகுதி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/45&oldid=825774" இலிருந்து மீள்விக்கப்பட்டது