பக்கம்:சித்தி வேழம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சித்தி வேழம் "புவிக்குன் பாதமதை நினை பவர்க்கும் கால தரிசன புலக்கண் கூடும் அது தன-நினேயாதே புரட்டும் பாவ சமயிகள் நெறிக்கண் பூது படிறரை.” - இந்தப்பாட்டுக்கு, "உலகில் கின் திருவடியை நினைபவருக்கும் காலதரிசனம் கண்ணுகிய புலனில் தோன்றும். அந்த உண்மையை கினேயாமல் புரட்டிப் பேசும் பாவிகளாகிய சமயிகளுடைய வழியிலே புகும் வஞ்சகரை” என்று பொருள் கொள்ளலாம். : پر : ' + "புவிக்கு உன்பாதமதை கினேபவர்க்கும் கால தரிசனே புலக்கண் கூடும்" என்ற பகுதிதான் இங்கே ஆராய்ச்சிக்கு உரியது. புவிக்கு என்பது புவியில் என்னும் பொருள் உடை யது, உருபு மயக்கம். பாதமதை-பாதத்தை அது பகுதிப் பொருள்விகுதி. உன் திருவடியை கினைப்பவர்களுக்குக் கால தரிசன கண்ணில் படும்' என்று பொருள்கொள்ளும்படி இப் பகுதி அமைந்திருக்கிறது. அருணகிரிநாதர் பிற இடங்களில் கூறும் கருத்துக்கு இது மாறுபாடாக இருக்கிறது. அது மட்டும் அன்று கினேயவர்க்கும் கால தரிசன கூடும் என்ப தில் வரும் உம்மைக்கு ஒரு பொருளும் இருப்பதாகத் தோன்ற வில்லை. மற்றவர்களுக்குத் தோன்றுவதோடு, அவர்களுக் கும் தோன்றும் என்று கொள்ளலாமா? அது சிறப்பன்று; பொருத்தமாகவும் இல்லே. - இந்த அடி, "உன்னே நினைக்கிற அன்பர்களுக்கும். காலன் தரிசன கூடுமா? அவர்கள்முன் அவன் தலையை நீட்டுவான?" என்று பொருள்பண்ணும்படி இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்போது உம்மைக்குப் பொருள் கிடைக்கும். அது உயர்வு சிறப்பும்மையாகிவிடும். - "புலக்கண் கூடுமா?" என்று வினப் பொருள் கிடைத் தால் இந்தப் பகுதி சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமையும். "புலக்கண் கூடும்" என்பது சந்தத்தில் அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/46&oldid=825775" இலிருந்து மீள்விக்கப்பட்டது