பக்கம்:சித்தி வேழம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பைக் குன்று மனிதன் தன்னுடைய வாழ்வில் இன்பம் துன்பம் என்னும் இரண்டையுமே அநுபவிக்கிருன். புண்ணியத்தின் பயனே மட்டும் நுகர்பவர்கள் தேவர்கள். பாவத்தின் பயனே மட்டும் நுகர்பவை விலங்கினங்கள். புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் பயனேயும் நுகர்பவன் மனிதன். அந்த இரண்டும் கலந்த வினேக்கு மிசிரகர்மம் என்று பெயர். அதன் பயனுக இன்பம், துன்பம் என்னும் இரண்டையும் அநுபவிக்கிருன். ஆளுல் மனிதன் தான் பெற்ற துன்பத்தையே எண்ணி எண்ணி ஏங்குகிருன். வெங்காய வடை தின்றவன் வாயில் வடையில் உள்ள மற்றப்பகுதிகளின் சுவை நெடு நேரம் நில்லாது; வெங்காயத்தின் சுவைமட்டும் நெடிது கிற்கும். அது போலவே மனிதனுக்கு இன்பம் நுகர்ந்த நினைவு கெடு நேரம் நிற்பதில்லை; துன்ப நினைவே மனத்தில் வண்டலிடு கிறது. இன்ப துன்பங்களே ஒரு கிலேயனவாகப் பார்க்கிற ஞானிகளுக்கு அவற்ருல் எந்த விளைவும் உண்டாவதில்லே. மற்றவர்களுக்கோ துன்பமே மனத்தில் பதிந்திருப்பதனல் வாழ்வே துன்பம் என்று தோன்றிவிடுகிறது. குழந்தைகளும் ஞானிகளும் இதற்கு விலக்கு. - - எவை எவை இன்பத்துக்கு ஏதுவானவை என்று புகுகிருனே அவற்றையே துன்பத்துக்குக் காரணம் என்று உணர்கிருன் சுற்றத்தார்ால் வரும் இன்பத்தைக் காட்டிலும் , துன்பமே மிகுதி. உணவினல் வரும் இன்பத்தைவிடத் துன்பம் மிகுதி. இப்படியே ஒவ்வொன்ருலும் அவன் துன்பத்தை அடைந்து கொண்டிருக்கிருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/49&oldid=825778" இலிருந்து மீள்விக்கப்பட்டது