பக்கம்:சித்தி வேழம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனல் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளேக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களேப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலன அவ்வாறு சிந்தித்ததல்ை உண்டான விளைவுகளே. முதல் இரண்டு கட்டுரைகளும் விகாயகப் பெருமானப் பற்றியவை. ஏனேயவை முருகப் பெருமானப் பற்றியவை. முதல் கட்டுரையும் முடிவுக் கட்டுரையும் திருவிளையாடற் புராணத்தில் வரும் இனிய செய்யுட் களினூடே புகுந்து சிந்தித்த சிந்தனைச் சித்திரம். 8 முதல் 18 வரையில் உள்ள கட்டுரைகள் சேந்தனர் பாடிய திருவிடைக்கழித் திருவிசைப்பாவிலுள்ள பதிைெரு பாடல்களின் விளக்கம். முருகனைக் காதல் காயகனக வைத்துப் பாடிய பாடல்கள் அவை, அவற்றை உரையாடலாக விரித்து விளக்கி யிருக்கிறேன். பதினொரு பாடல்களுக்கும் ஒருவகையில் தொடர்பும் கூற முயன்றிருக்கிறேன். திருமுறைகளில் பல இடங்களில் முருகனேப் பற்றிய குறிப் புக்கள் இருக்கின்றன. அவற்றை யன்றி ஒன்பதாம் திருமுறையில் ஒரு பதிகமும், பதினேராக் திருமுறையில் ஒரு நூலும் முருகனப் பற்றியனவாக உள்ளன. பதினேராங் திருமுறையில் உள்ளது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை ஒன்பதாங் திருமுறையாகிய திருவிசைப்பாவில் உள்ளது, இதிலுள்ள திருவிடைக்கழிப் பதிகம். இங்ககாலத்துக்குப் பின் தோன்றிய முருகனுடைய துதிகளில் சந்தப் பதிகமே பழையதென்று சொல்லலாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/5&oldid=825779" இலிருந்து மீள்விக்கப்பட்டது