பக்கம்:சித்தி வேழம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான் கண்ட நிகழ்ச்சியைக் கூறும் கட்டுரை ஒன்றும், அருண கிரியார் திருவுள்ளத்தைப் பற்றி ஆராயும் கட்டுரை ஒன்றும், முருகன் அழகைப் பற்றியது ஒன்றும் இதில் இடம் பெறுகின்றன. இதில் காணும் பாடல்கள் இலக்கியச் சிறப்பும் பக்திச் சுவையும் இணைந்தவை. அன்பர்களின் மனப்பெட்டகத்தில் வைத்துப் போற்றுவதற்குரியவை. . ...' . சித்தி வேழம் என்ற கட்டுரை தினமணி - கதிரிலும், கிழவியும் காதம் என்பது கல்கியிலும், பானக்கும் கலங்கார் என்பது திருச் செந்தூர்க் கும்பாபிஷேக மலரிலும், முருகன் அழகு என்பது கந்தன் மலர் என்ற வெளியிட்டிலும், இடும்பைக் குன்று என்பது முருகன் மலரிலும், தொட்டிலில் வளரும் முருகன் என்பது குமர குருப்ரனிலும், மற்றவற்றில் இறுதிக் கட்டுரையை யன்றிப் பிற யாவும் இருப்புகழ் அமிர்தத்திலும் வந்தவை. இவற்றை வெளியிட்ட பத்திரிகையாளருக்கும் வெளியீட்டாள ருக்கும் என் கன்றி உரியது. - காந்தம&ல" } கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர், சென்னை-28 24–1–61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/6&oldid=825790" இலிருந்து மீள்விக்கப்பட்டது