பக்கம்:சித்தி வேழம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும் பைக் குன்று 45. யாக்கின்ை. அந்தப் பெருமான் இந்தத் துன்பமலையையும் பொடியாக்கிவிட மாட்டான? இந்த எண்ணம் ஒரு பக்தருக்குத் தோன்றியது. அவர் கந்த புராணத்தைப் புரட்டிப் பார்த்தார். கிரவுஞ்சமலேயை முருகன் பொடி படுத்திய கதையை மறுபடியும் படித்துப் பார்த்தார். கந்த புராணம் முழுவதையுமே படித்து இன்புற்ருர். - - . ஒரே ஒரு முறை ஒரு மலையை வடிவேலால் பொடி யாக்கின்ை முருகன். அதற்குப் பிறகு அந்த வேலுக்கு, வேலேயே இல்லாமல் போய்விட்டது. அப்புறம் எந்த, மலேயையாவது அது துளேத்ததோ? அப்படிக் கேள்விப் படவே இல்லை. ஒன்றுக்கும் பயன்படாமல், என்ருே ஒரு நாள் ஒரு மலேயைப் துளைத்ததென்று அந்த வேலை ஏந்தி நிற்கலாமோ? அதற்கு வேலே இருந்தால் கையில் ஏந்தி கிற்கலாம். அப்போதுதான் அதற்கு மதிப்பு உண்டு. இல்லா விட்டால் வேல் துருப்பிடித்துப் போய்விடாதா? 'சுவாமி, உம்முடைய வேலுக்கும் வேலே வைத்து எனக்கும் உபகாரம் செய்யவேண்டும்” என்று அந்தப் பக்தர் வேண்டிக்கொண்டார். - - "முன்னமே ஒரு மலேமேல் வேலே விட்டு மாய்த்தாய். வேலாலே சூரனைக் கொன்ருய். அந்த வேலே இப்போது என்னிடம் உள்ள துன்பம் என்னும் பெருமலேயை நோக்கி, விடுவது பொருத்தமாக இருக்கும். வேலே வீச இலக்கு. இல்லாமல் இருந்தாய் அல்லவா? இப்போது அந்த வேலின் தினவு திர எனது இடும்பைக் குன்றின்மேல் ஏவு அப்பா!' என்று இரந்து கின்ருர். அவர் புலவர் ஆதலின் அந்த வேண்டுகோள் பாட்டாக வந்தது. ... • இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும் கொன்னவில் வேல் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/51&oldid=825781" இலிருந்து மீள்விக்கப்பட்டது