பக்கம்:சித்தி வேழம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் காதல் 57 "அவன உன் உள்ளத்தில் காதலை உண்டாக்கினவன்!” "ஆம்; அவன்தான் என் காதலன்.” 'அடி பைத்தியக்காரப் பெண்ணே! நாம் இங்கே மருத நிலத்திலே வாழ்கிறவர்கள். யாரோ மலைமகள் மதலேயரம்: தேவலோகத்து அரசனும்; தெய்வப் பெண்ணேயல்லவா அவன் மணம் புரிந்துகொண்டிருப்பான்?' 'இல்லை; இல்லை. அவன் இந்த உலகத்திலே பிறந்து வளர்ந்த மானிடப் பெண்ணுகிய வள்ளியை மணந்தவன்; வள்ளிதன் மணுளன்." - "அவனே நீ எப்படிக் கண்டாப்: தேவலோக மன்னகிைய அவன் உன் கைச் சங்கம் வவ்வினன் என்ருயே; அது எப்படி நிகழ்ந்தது?" - "அவன் தேவர் குலமுழுதாளும் மன்னன் ஆலுைம் உலகம் யாவுமே அவன் அருளாட்சியில்ை இயங்குகிறது. அவனுக்கு இந்த உலத்திலும் பல அரண்மனைகள் உண்டு.' 'அரண்மனைகளா? நான் கண்டதில்&லயே!” "திருவிடைக்கழியில் ஒர் அரண்மனை இருக்கிறது." 'இதோ பக்கத்தில் இருக்கிறதே; இந்தத் திருவிடைக் கழியிலா?” - - "ஆமாம், சேல் மீன்கள் உலாவும் கழனிகளோடு விளங்கும் கிலவளம் மிக்க இதே திருவிடைக்கழிதான்.' - "அங்கே அரண்மனை ஏதும் இருப்பதாகத் தெரிய வில்&லயே?’ + - 'கோயிலும் அரண்மனைதானே? கோ என்பது அரசனுக்குப் பெயர்: அவன் இருக்கும் இல் அரண்மனை அல்லவா? - - - 'அந்தக் கோயிலிலா அவன் இருக்கிருன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/63&oldid=825794" இலிருந்து மீள்விக்கப்பட்டது