பக்கம்:சித்தி வேழம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சித்தி வே மும் 'அவன் மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வின்ை." . . . . மாலுக்கும் சங்கத்துக்கும் பிரிவு இல்லையே! நீ சொல்வது மாருக இருக்கிறதே! மாலேக் கொடுத்துச் சங்கை வவ்வுவதாவது?” என் கைவ&ள்களைச் சொல்கிறேன். என் உள்ளத்தே காம மயக்கத்தை வைத்துவிட்டு என் கைவளையைக் கவர்ந்து கொண்டான்." 'யார் அந்தக் கள்வன்?” 'அவன் என் அளவிலே கள்வனே யன்றி, சிறந்த குடியிற் பிறந்தவனே." - "யார் அவன்? - 'மலேமகளுக்குப் பிள்ளை." "மலேயிலுள்ள மகளென்ருல் குறத்தியா? என்ன சாதி?" 'அவன் பார்வதி குமரன்.' - "அவனுக்கு என்ன வேலை: 'அவன் அரசன், குடிமன்னன்; மன்னதி மன்னன்; சக்கரவர்த்தி." - ... " 'எந்த நாட்டுக்குச் சக்கரவர்த்தி?” 'தேவலோகத்துக்கு நாயகன் அவன்; மேலே உள்ள விண்ணில் உலாவும் தேவர் குலம் முழுவதையும் அடிமை யாகக் கொண்டு ஆட்சி செலுத்தும் மன்னன் அவன்.” - "அவன் வயசு? . . . . . "அவன் கட்டிளங்காளே, குமரவேள்." - இன்னும் திருமணம் ஆகவில்லையோ?” "அவனுக்கு இரு மனைவியர் உண்டு. அந்த இருவருக்குள் உலகமெல்லாம் அறிந்த பெருமையை உடையவள் வள்ளி." . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/62&oldid=825793" இலிருந்து மீள்விக்கப்பட்டது