பக்கம்:சித்தி வேழம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் காதல் 55 அவர்களுக்கு விடை சொல்ல முடியாமல் திணறுகிறேன். உனக்கு என்ன நோய் வந்திருக்கிறதென்று எனக்கே தெரிய வில்லேயே! அவர்களுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்: - என் உடம்பைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலே?" 'அவர்களும் உன்னிடம் அன்புடையவர்கள்; அதனல் கேட்கிருர்கள். அவர்கள் கூறுவது கிடக்கட்டும். இப்போது நான் கேட்கிறேன்; எனக்குச் சொல்: ஏன் உன் உடம்பு இப்படி இளைத்துப் போகிறது?" عر அந்தப் பெண் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்; "நீ என் உடம்பை மட்டுந்தானே பார்க்கிருய்?” - "பின் எதைப் பார்க்கவேண்டும் என்கிருப்?" 'என்னுடைய மனமும் இளைத்திருப்பதை 房 அறிவாயா?" - - - அதென்ன புதுமை?” "புதுமை ஒன்றும் இல்லே, இயல்புதான். என் உள்ளம் இளேத்தது; அதல்ை என் உடலும் இளைத்தது.' 'உள்ளம் ஏன் இளேக்கவேண்டும்?" - 'உள்ளத்தில் மயக்கம், மால், உண்டாகி யிருக்கிறது. அது பரவி யிருப்பதால் உள்ளம் இளேத்து வருகிறது.' 'மாலா? அது எப்படி வந்தது? . "அதை ஒருவன் தந்தான்." 'ஒருவன? அவன் யார்?' "அவன் ஒன்றைத் தந்து ஒன்றை வவ்விக்கொண்டு போனன்." - "நீ பேசுவது வியப்பினும் வியப்பாக இருக்கிறதே! சற்றே விளக்கமாகச் சொல்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/61&oldid=825792" இலிருந்து மீள்விக்கப்பட்டது