பக்கம்:சித்தி வேழம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சித்தி வேழம் இளநங்கை வரவர் மெலிவை அடைந்தாள். இறுக இறுகப் போட்டிருந்த கைவளை நெகிழ்ந்தது. அவளுக்கு விருப்பமான உணவுகளேக் கொடுத்துப் பார்த்தாள் அன்னே. அவள் அவற்றை நாடவில்லை. நல்ல மணமுடைய மலரால்ை குழல் நிறையச் சூட்டிக் கொள்ளும் வழக்கம் உடையவள் அந்தப் பெண். இப்போது மலரைக் கண்டாலே அருவருக் கிருள். அயல்வீட்டுப் பெண், எதிர்வீட்டுத் தோழி, அடுத்த தெரு நங்கை ஆகியவர்களுடன் ஒடியும் ஆடியும் கூடியும் குதித்தும் விளையாடுவாள்; இப்போது கோப்வந்தவளேப் போலச் சும்மா உட்கார்ந்திருப்பதும் சோர்ந்து சோர்ந்து படுப்பதுமாக இருந்தாள். தாய்க்கு அவளிடம் உண்டான மாறுபாடுகள் தெரிந்தன. ஆளுல் காரணம் இன்னதென்று தெரியவில்லை. அவளுக்கு உடல் நோயா? உள்ளநோயா?-தெரிந்துகொள்ள முடியவில்லை. '. . . . . ஒருநாள் அன்னைக்கு உண்டான கவலே கரையிறந்து சென்றது. வளரும் குழந்தை, வாழுங் குழந்தை இப்படி இருக்கலாமோ? என்று அங்கலாய்த்தாள். அவளிடமே கேட்டுவிடுவதென்று தீர்மானித்தாள். அவளே அணுகி மெல்ல அவள் தலையைக் கோதினுள் உடம்பை வருடினுள். "ஐயோ! உடம்பு எவ்வளவு இளைத்துப் போய்விட்டது: என் அம்மா, இப்படிச் சேர்ந்து சோர்ந்து கிடக்கிருய் உன் உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள். - என் உடம்புக்கு ஒன்றும் இல்லை." - "அப்படியால்ை என் கண் காணுவது பொய்யா? என். கண்தான் சரியாகப் பார்க்கவில்லை யென்று வைத்துக் கொண்டாலும் ஊரார் கண்கள் கூடவா பொய் சொல்லும்?" ஊராரா? அவர்கள் எங்கே வந்தார்கள்?" உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் என்ன உன் பெண் ஏன் இப்படி இளேத்திருக்கிருள் என்று கேட்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/60&oldid=825791" இலிருந்து மீள்விக்கப்பட்டது