பக்கம்:சித்தி வேழம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் காதல் 53 கண்டு இன்புற்ருள். கண்மூடி மோன யோகியைப் போல கின்றிருந்த அப் பேதை கண்ணத் திறந்து பார்த்தாள். முருகன் கெடுத்துரம் சென்றுவிட்டான். - சோழ நாட்டில் உள்ள திருவிடைக்கழி யென்னும் திருத் தலத்துக்கு அந்தப் பெண் வந்திருந்தாள். வந்தபோது நிகழ்ந்தது இது. உணர்வு வந்த கங்கைக்கு முருகனத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. எவ் வளவு தூரக்தான் அவள் போக முடியும்? அவளுடன் வந்த தோழிமார்கள் அவளே அழைத்தார்கள். கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று பிரமை பிடித்தவளேப் போல நிற்பதைக் கண்டு அவர்களுக்கு வியப்பாக இருந்தது; அச்சமும் உண்டாயிற்று. இவளேக் கூட்டிக்கொண்டு போப் இவள் வீட்டில் விட்டுவிடலாம், இனியும் இங்கே நிற்பது கூடாது' என்று எண்ணிய அவர்கள் அந்த அழகியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தம் ஊரை அடைக் தார்கள். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவளே விட்டுவிட்டு அவளுடைய தாயிடம், உங்கள் பெண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லேபோல் இருக்கிறது' என்று தனியே சொல்லிப் போய்விட்டார்கள். - - - வீட்டுக்கு வந்தவள் திருவிடைக்கழியிலே கண்ட காட்சி யிலே உள்ளத்தை கிறுத்தி வேறு ஒன்றும் தோன்ருமல் இருந்தாள். வழக்கம்போல் பேசுவதும் விளையாடுவதும் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்வதும் ஆகிய வற்றை இப்போது அவள் மறந்தாள். எப்போதும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருத்தாள். எப்போதும் மான்போலத் துள்ளி விளேயாடும் தன் மகள் இவ்வாறு இருப்பதை உணர்ந்த தாய்க்கு, ஏன் இப்படி இருக்கிருள் என்ற ஆராய்ச்சி பிறந்தது. தாகை உய்த்துணர்ந்து கொள்ளலாம் என்று கினைத்தாள். தன் பெண்ணின் செயல்களே உற்றுக் கவனிக்கலானுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/59&oldid=825789" இலிருந்து மீள்விக்கப்பட்டது