பக்கம்:சித்தி வேழம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் காதல் தேவர்கள் புடைசூழ முருகன் திருவீதியில் உலா வங் தான். இசைக் கருவிகள் முழங்க, அந்தணர் மறை ஒத, அரம்பையர் வாழ்த்தெடுப்ப, அன்பர்கள் புகழ் பாட ஒளி மய மான சூழலுக்கு நடுவே தன்னுடைய அருட்சோதியைப் பரப்பிக்கொண்டு பச்சைப் பசு மயில்மேல் அவன் பவனி வந்தான். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத பேரழகன், என்றும் குன்ருத சீரிளமையோன் உலா வந்தால் அன்பர்கள் சும்மா இருப்பார்களா? அவனுடைய திருமேனி யழகில் சொக்கிப் போய்த் தம்மை மறந்து கின்றனர். விண்ணவர் வியந்து நின் றனர். மகளிர் அந்த அழகுக் கடலுக்குக் கரைகாணமல் தம் கண்களாகிய மீன்களே அதில் உலாவ விட்டனர். அவர்களுள் ஒர் இளம் பெண் ஆறுமுகத்தையனுடைய பேரழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்தாள். பெண் பிறவி யெடுத்த பேருக அவனேயே காத்லகை உள்ளத்தில் வரித்துக் கொண்டாள். அவன் திருவடி முதல் திருமுடி வரையில் கண் களால் ஊடுருவிப் பார்த்தாள். அவன் தனக்காகவே திருவீதி யில் உலா வந்ததாக எண்ணிப் பூரித்தாள். கள் குடித்த வள் போல் ஆடினுள், பாடினுள்: மனத்தில் ஒருவகை நிறைவை எய்தினள். உலகத்தில் ஆண்களே இல்லை; இவன் ஒருவன்தான் ஆண். இவனே நோக்க மற்ற ஆண்கள் யாவ: ருமே பெண்கள்தாம். இந்த ஆணழகன, இந்த நம்பியை, இந்தப் புருஷோத்தமனேக் காதலகை அடைவதுதான் பெண்ணுய்ப் பிறந்த பிறவிக்குப் பயன் என்று துணிவு. பூண்டாள். அவள் கண்களில் ஓர் ஒளி, அப்பால் இன்பக் கண்ணிர். புறத்தே கண்ட முருகன் காட்சியை அகத்தேயும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/58&oldid=825788" இலிருந்து மீள்விக்கப்பட்டது