பக்கம்:சித்தி வேழம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்டிவில் வளரும் முருகன் 5 * அங்கங்கே இப்படி முருகன் சம்பந்தமாகப் பல வரலாறு கள் வழங்கி வருகின்றன. அவை அனைத்தும் கந்தபுராணக் கதைக்குப் புறம்பாக இருக்கலாம். சில சிறந்த கருத்தோடு இருக்கலாம். சில அவ்வளவு உயர்ந்தனவாக இராமலும் இருக்கலாம். ஆயினும் முருகப் பெருமானே என்றும் குழந் தையாகவே வைத்து வழிபடும் ஆவலால் அப்படி ஒரு சிற்ப மும் அதற்கு ஒரு வரலாறும் அன்பர்கள் அமைத்துக்கொண் டார்கள் என்று ஆராய்ச்சி மனப்பான்மையோடு முடிவுகட்ட லாம். எப்படியானலும் முருக வழிபாடு தமிழர் நெஞ்சில் எப் படியெல்லாம் புகுந்து உருவாகிறது என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/57&oldid=825787" இலிருந்து மீள்விக்கப்பட்டது