பக்கம்:சித்தி வேழம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சித்தி வேழம் அணேத்து முததமிடடுச் சீராட்டி அவற்ருல் வரும் இன்பம் அடைய முடியாது. இவன் என்றும் இளையனுக இருந்தால் என்றும் மாருத இன்பம் அடையலாம். இவனைச் சரவணத் தில் குழந்தையாக அடைந்தபோது அமரர்கள் குரனே அழிக்க வேண்டுமென்று வேண்டினர்கள். அதனுல் குழந்தை யாக இருந்தவன் குமரனுக வளர்ந்தான். அமரர் சே&னத் தலைவனைன். சூரசங்காரம் செய்தான். குழந்தையினிடம் கானும் இன்பத்தை எப்போதும் பெற இயலவில்லை. அப்படி இன்றி இத்தலத்தில் இவன் என்றும் இளேய குழந்தையாக இருக்கும்படி அருள் புரியவேண்டும்’ என்று வேண்டினள். "உன் விருப்பம் நிறைவேறட்டும்' என்று இறைவன் திருவருள் பாலித்தான். . . . - "எப்போதும் தொட்டிலில் விட்டுத் தாலாட்டுப் பாடி இன் புற ஆவல் எழுகிறது. ஆதலின் முருகன் தொட்டிற் பருவத் தினனுக இருக்கவேண்டும். இந்த ஊருக்கும் தொட்டியினுல் பெயர் அமையவேண்டும்” என்று பின்னும் வேண்டினுள் பிராட்டி. X- - - o இறைவன், 'அவ்வாறே ஆகுக' என்று அருளினன். அன்றிலிருந்து இங்கே முருகன் தொட்டியில் வளரும் இள முருகனகவே எழுந்தருளியிருக்கிருன். அவன் தொட்டியில் வளர்விதல்ை, அவனுக்குச் சமானமாக மானிடக் குழந்தை களுக்குத் தொட்டில் இடுவது முறையன்று என்று எண்ணி, இந்த ஊரினர் தம் குழந்தைகளேத் தொட்டிலில் விட்டுத் தாலாட்டுவதில்லே தூளி முதலியவற்றில் விட்டு உறங்கச் செய்கின்றனர். - r . 'தெர்ட்டியமர்ந் தொருபால சுப்பிரமணியச்செம்பொற் கட்டிஇனி தென்றும்உறுங் காரணத்தால் அனேயவிளத் தொட்டிதகர் வாழ்வார்தம் சூழ்மனேயின் மழத்தொட்டி * கட்டிஅறி யார்வேறு கட்டிவளர்த் தோங்குவார்.' (தொட்டி - தொட்டில் மழத்தொட்டி - குழந்தைகளுக்குரிய தொட்டில். வேறு வேறு வகையான துளி முதலியவற்றை. வளர்த்து. உறங்கச் செய்து.) - - х -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/56&oldid=825786" இலிருந்து மீள்விக்கப்பட்டது