பக்கம்:சித்தி வேழம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்டி லில் வளரும் முருகன் 49 உறங்கினன். அம்மை தாலாட்டினள். அவன் இருந்து சப்பாணி கொட்டிஞ்ன். தன் தாய் தந்தையர் ஆவலுடன் அனேக்க அவர்களுக்கு முத்தம் அளித்து உவகை ஊட்டினன். மெல்ல மெல்லத் தளர்நடையிட்டு நடந்தான். அப்போது உமையும் பிறரும், : - ) 'வருகசுரர் குலக்கொழுந்தே, வருகமறைப் பெருந்திருவே, வருகமழ இளங்களிறே, வருக.அருட் பசுங்குருந்தே, வருகசுடர் மணிவிளக்கே, வருகநறுஞ் சுவையமுதே, வருக இரு கண்மணியே, வருக வருக' - என்று ஆவலோடு அழைத்து இன்புற்றனர். அம்புலி மானே முருகன் வாவா என்று அழைத்தான். திருவீதியிற் சென்று புழுதி திருமேனியிற் படிய விளையாடிச் சிறுமியர் கட்டிய சிற்றில்களேயெல்லாம் தன் திருவடியால் சிதைத்தான். சிறு பறை கொட்டினன். சிறு தேர் உருட்டின்ை. - இப்படிக் குழந்தை பலவகை விளையாடல்களையும் அயர் வது கண்டு கண்ணும் மனமும் குளிர்ந்தாள், கரும்பிரத நாயகி. உச்சியில் கொண்டை அணிந்து, நுதலில் பொட் டணிந்து, கண்ணுக்கு மையிட்டு, காதுக்குக் குதம்பை புனேந்து, மார்பில் ஐம்படை புனேந்து, அரைக்கு மணி கட்டி, காலுக்குத் தண்டை பூட்டி அழகு கண்டு மகிழ்வுற்ருள். அவனே அணேத்து அணேத்து இன்புற்ருள். பலகால் மூத்த மிட்டுப் புளகம் போர்த்தாள். அவன் நடப்பதைக் கண்டு கண்டு பூரித்தாள். மென்மழலே கேட்டு உவகைக் கடல் குனித்தாள். இப்படியே என்றும் இளம் பருவம் மாருமல் முருகன் குழந்தையாகவே இருக்க, தான் அவனே இடைவிடா, மல் சீராட்ட வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று, அம்மைக்கு. * ... . . . . . - தன்னுடைய விருப்பத்தை இறைவனிடம் தெரிவித்தாள் கரும்பிரதநாயகி. "எம்பெருமானே, இளங் குழந்தையில்ை தாய் தந்தையர் அடையும் இன்பத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை. குழந்தைப் பருவம் தீர்ந்து பெரியவனைல் கொஞ்சி சித்-4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/55&oldid=825785" இலிருந்து மீள்விக்கப்பட்டது