பக்கம்:சித்தி வேழம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சித் தி வேழம் ஒரு மகவு வேண்டும் என்ற விருப்பம் அம்மைக்கு உண்டாயிற்று. . - எப்போதும் கன்னியாக இருக்கும் அம்மை இந்தத் தலத்தில் ஒரு திருவிளையாடலே நிகழ்த்தக் கருதினள். இறைவன் சுடர்க் கண்ணிலே பொறியாகத் தோன்றிப் பின்பு சரவணப்பூம் பொய்கையில் ஆறு வேறு குழந்தைகளாக வளர்ந்த முருகனத் தன் கையால் அணேத்து ஒர் உருவ மாக்கிப் பொற்கிண்ணத்தில் கறந்த பாலே ஊட்டியருளினள், முன்பு. முருகன் தன் திருவயிற்றில் பிறந்து, குழந்தைக்குச் செய்யவேண்டிய அருமைப்பாடுகளேயெல்லாம் செய்து அவனே வளர்க்கவேண்டும் என்று திருவுள்ளங் கொண்டாள், } எம்பிராட்டி, இறைவனும் உடம்பட்டான். அவ்வாறே முருகனைக் கருக்கொண்ட பிராட்டி ஒரு நல்ல நாளில் குழந்தையைக் கருவுயிர்த்தாள். - 'இருநகிலும் பச்சைநரம் பெழுந்தோட மெய்விளர்ப்பக் கருமுதிர்ந்து, பெருந்திருப்பாற் கடல்உயிர்த்த முழுமதிபோல், பொருவில்சலஞ் சலம்உயிர்த்த முத்தேபோல், பொற்புமலி திருமகவை இனிதுயிர்த்தாள் சேண்உலகெலாம்.உயிர்த்தாள்.' . நகில் தனம். விளர்ப்ப வெண்ணிறம் பூன. உயிர்த்தபெற்ற, பொரு இல் - ஒப்பற்ற, சலஞ்சல்ம் - உயர்ந்த சாதிச் சங்கு. சேண் உலகு - கெடுந்துTரம் பரவிய உலகங்கள், உயிர்த் தாள் - பெற்ருள். . . . . பிறந்த குழந்தையைக் கண்டு அளவற்ற மகிழ்பூத்து என்ணெய் ரோட்டினுள் கரும்பிரத நாயகி. திருமகளும் கலே மகளும் அம்மைக்குப் பாங்கியராக இருந்து ஏவல் புரிந் தார்கள். நீராட்டி மெய் துடைத்துத் திருநீற்றுக் காப்பு அணிந்து பால் கொடுத்து வளர்த்தாள். கண்கொள்ள அழகுடன் குழந்தை வளர்ந்து வந்தது. முருகன் குப்புறக் கிடந்து ஒரு கால மேலே தூக்கி உதைந்து செங்கீரையாடினன். பொற்ருெ ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/54&oldid=825784" இலிருந்து மீள்விக்கப்பட்டது