பக்கம்:சித்தி வேழம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்டிலில் வளரும் முருகன் சோழ நாட்டில் விளத்தொட்டி என்ற ஊர் இருக்கிறது. குத்தாலம் ரெயில்வே கிலேயத்துக்கு வடக்கே உள்ளது. அது. அந்த ஊரில் முருகக்கடவுள் தொட்டிலில் வளரும் குழந்தை யாக, இள முருகனுகக் காட்சி அளிக்கிருன். அந்த ஊருக்கு வில்வவனமென்றும், கூவிளங் காடென்றும் பெயர்கள் உண்டு. கூவிளம் என்பது வில்வத்துக்குப் பெயர். கூவிளம் என்பதிலுள்ள பிற்பகுதியும் முருகன் வளரும் தொட்டிலால் சிறப்புடைமையால் தொட்டி என்னும் பெயரும் இனேந்து விளக்தொட்டி என்ற பெயர் வந்ததாம். தொட்டிலேத் தொட்டி என்றும் வழங்குவர். முருகன் தொட்டிலில் என்றும் இளே பு குழந்தையாக வளர்வதல்ை அந்த ஊரில் இன்றும் யாரும் குழந்தைகளைத் தொட்டிலில் விடுவதில்லே, துணியைக் கட்டி அந்தத் தூளியில் விடுவதே வழக்கமாக இருக்கிறது. இந்தத் தலத்துக்கு ஒரு தமிழ்ப் புராணம் இருக்கிறது. அதனைப் பாடியவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். அந்தப் புராணத்தில் முருகன் இங்கே தொட்டிலில் வளரும் வரலாற்றைச் சொல்லும் 'விளத்தொட்டிப் படலம்" என்ற பெயருடன் ஒரு படலமே இருக்கிறது. அந்த வரலாற்றை இங்கே பார்க்கலாம். வில்வ வனமாகிய விளத்தொட்டியில் எழுந்தருளியிருக் கும் அம்பிகை கரும்பிரத நாயகி. சிவபெருமானுக்கு வில்வ மூல காதர் என்று திருநாமம். எம்பெருமானும் எம்பெருமாட்டியும் இந்தத் திருத் தலத்தில் எழுந்தருளி வந்து பணிவார்களுக்கு வேண்டிய கலங்களே வழங்கி மகிழ்ந்திருந்தனர். அப்போது தனக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/53&oldid=825783" இலிருந்து மீள்விக்கப்பட்டது