பக்கம்:சித்தி வேழம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயுறும் வகை 89 இருந்தாலும் அவனுடைய வடிவம் மற்றவர்களினின்றும் கன்ருக எடுத்துக் காட்டுகிறது. மேகக் கூட்டத்தினிடையே மின்னலேப்போல அவன் திருவுருவம் கண்ணேப் பறித்தது.” "மின்னலேயும் கதிரவனையும் சொல்கிருயே! அவை வானத்தில் இருப்பவை அல்லவா? அப்பெருமான் நாம் எப்போது போய்க் கண்டாலும் காணும்படி எளியணுக இருக்கிருனே!" - "அதுவும் உண்மைதான். பவளம் போல என்று சொல்லலாம் அல்லவா? பவளங் திரண்ட கோல மென்றே , சொல்லவேண்டும். பவளத்தன்ன மேனி என்று பழைய பாடலில் இருக்கிறதே!" - "சிவபெருமானே பவளக்குன்றம் போல இருப்பவர்; அவருடைய திருமகன்தானே?" & - "அப்படியால்ை முருகனைப் பவளத்தின் குழவி என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சில சமயங்களில் அவன் திருமேனி பொற் சோதியுடன் இலங்குகிறது. சிந்துர வண்ணமும் பொன்னும் இணைந்த ஒருருவம் அது. சிவப் பாலே, சிந்துரமும் தேசினலே பொன்னும் இணைந்த பேரழகு அது!” - - "பவளம், பொன் என்று மக்கள் பாராட்டும் பொருள் களே யெல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டாயே! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது?” • "அவனுடைய திருவுருவம் உவமைக்கு அப்பாற்பட்டது; ஈடும் எடுப்பும் அற்றது. நாம் நம்முடைய அறியாமை யினுல் நமக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் சொல்லி வைக் கிருேம். மாணிக்கம்போல அவனுடைய ஒவ்வோரங்கமும் சோதியும் செம்மையும் உடையதாக விளங்குகிறது: தூமணித்திரள் என்று சொல்லலாமோ என்று ஒர் எண்ணம் உதிக்கிறது; ஆல்ை யாவும் அவனுடைய திருமேனிக்கு ஒப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/95&oldid=825829" இலிருந்து மீள்விக்கப்பட்டது