பக்கம்:சித்தி வேழம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சித்தி வேமும் தாயின் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்தாள். "உன் மகள் ஏன் இப்படி இருக்கிருள்?’ என்று கேட்டாள். "அவளுக்கு முருகனிடத்தில் மையல்' என்ருள் தாய். "திருவிடைக்கழியில் இருக்கிருனே, அந்தப் பெருமா னிடமா?? - "ஆம்.' - “அவனுடைய கிலேயை நீ அறிவாயா?" என்று தோழி கேட்டாள். - х . தாப் தான் சென்று வந்ததைச் சொன்னுள்: "கேற்றுத்தான் போயிருந்தேன்; கண்ணே இமைக்காமல் அப்பெருமானப் பார்த்தேன். என்ன தேசு என்ன தேசு: அக்கினிப் பிழம்பு போலத் தோன்றினன். சிவபெருமா னுடைய அக்கினிக் கண்ணிலிருந்து தோற்றிய ஞானக் கொழுந்து அவன் என்பது கினேவுக்கு வந்தது. இவ்வுலகத் தார் உய்ய வேண்டும் என்று கருதி நம் கண் காணப் பரிவுடன் இங்கே எழுந்தருளியிருக்கிருன்..கருணயையுடைய செஞ்சுடராகிய அக்கினியோ என்று சற்றே கின்று யோசித்தேன்." . "ஆம், அவன் திருமேனி செங்கனலேப் போலச் சிவப் பாக இருக்குமென்றுதான் சொல்கிருர்கள்." "மற்ருெரு விதத்தில் அவன் கதிரவனப் போலக் காட்சி அளித்தான். புற இருளேப்போக்கும் வான சூரியனைப்போல அக இருளப் போக்கும். ஞான சூரியனுக அவன் இலங்கு கிருன். இருளின் கூறு சிறிதளவும் அவனே அணுகாது." பெரியவர்கள் அவனே ஆயிரங்கோடி சூரியர் ஒன்ருக இருந்தாற் போன்ற உருவுடையவன் என்றுதான் புகழ் சூரியன் உச்சிவானத்தில் இருக்கும்போதே நம்மால் பார்க்க முடியவில்லையே! இவனே நாம் கண் கொண்டு பார்க்கும்படி எழுந்தருளியிருக்கிருன். எத்தனே கூட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/94&oldid=825828" இலிருந்து மீள்விக்கப்பட்டது