பக்கம்:சித்தி வேழம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயுறும் வகை இந்த முறை பெண்ணின் தாய் திருவிடைக்கழிக்குச் சென்று கின்று கிதானமாக முருகனைத் தரிசித்துவிட்டு வங்தாள். அவனுடைய திருமேனிப் பேரழகைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தாள். இவனுடைய தெய்வத் திருமேனி எங்கே! மானிட மகளாகிய இவளுடைய கிலே எங்கே!' என்ற எண்ணம் அப்போது அவளுக்கு உண்டாயிற்று. ஊருக்கு வந்தாள். முருகனுடைய உருவம் அவள் அகக் கண்ணில் கின்றது. அவள் புறக்கண்ணுக்கு எதிரே அவளுடைய மகள் நின்ருள். இயற்கையில் அந்தப் பெண் நல்ல அழகிதான். ஆல்ை இப்போதோ முருகன்மேல் காதல் கொண்டமையால் உடம்பெல்லாம் மெலிந்து பசலே பூத்து நிற்கிருள். அவளுடைய தோற்றம் தாய்க்கு இரக்கத்தை உண்டாக்கியது. . - மிகவும் இனிமையாகப் பேசும் பெண் அவள்: அஞ்சொல் இளகங்கை. இப்போது யாரோடும் பேசுவதே இல்லை. முருகனிடம் மையல் கொண்டாள். அதனல் துயரம் இல்லை. அந்த மையல் நிறைவேறுமோ இல்லையோ என்று அவள் ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணி ஏங்கு கிருள். இந்த ஏக்கந்தான் அவளேக் குலேக்கிறது. மையல் கொள்ளாமல் இருக்கவேண்டும். அப்படிக் கொள்வதாக இருந்தால், நிச்சயமாக முருகன் அருள் செய்வான் என்ற உறுதி இருக்கவேண்டும். அந்த உறுதி இல்லாமல் மையலேக் கொண்டுவிட்டு எப்பேர்தும், அவன் அருள்வானே, மாட் டானே!” என்று ஐயுற்று நிற்கிருள் அவள். அவளுக்கு மைய லால் வந்த துன்பத்தைவிட ஐயத்தால் வந்த துன்பமே மிகுதி. - * ... '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/93&oldid=825827" இலிருந்து மீள்விக்கப்பட்டது