பக்கம்:சித்தி வேழம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சித் தி வேழம் உணர்ந்து உவந்த தாய், பிறகு அவன் இவளே ஏற்றுக் கொள்வான என்று எண்ணும்போது அவள் உள்ளம் உருகியது. அவள் சொல்வதாகப் பாட்டு அமைந் திருக்கிறது. கிளை இளஞ் சேய்,அக் கிரிதனேக் கிண்ட ஆண்டகை, கேடில்வேற் செல்வன், வண் இளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலே, கார்நிற மால் திரு மருகன், திளை இளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற முன் இளம் களிறு என் மொய்குழற் சிறுமிக்கு அருளுங்கொல் முருகவேள் பரிந்தே? (கிளேத்துப் பரந்த இளமையையுடைய செம்மை நிறத்தான், அந்தக் கிரவுஞ்சமலேயைப் பிளந்த ஆண்மையை உடையவன், அழி வற்ற வேலே ஏந்திய செல்வன், வளைந்த இளேய பிறையை அணிந்த சிவந்த சடையையுடைய அரனுடைய பிள்ளே, மேகத்தின் நிறம் பெற்ற திருமாவின் ஆழகிய மருமகன், யாவரும் வந்து இன்பம் நுகர் கின்ற சோலைகள் சூத்த திருவிடைக்கழியில் தெய்விகத் தன்மை வாய்ந்த குராமரத்தின் கிழலின்கீழ் நிலவும், கொம்பு முளேக்கும் இளைய ஆண்யானே போன்றவன், முருகவேள் என்னும் திரு.காமம் உடையவன், அடர்ந்த குழலேயுடைய என் இளம் பெண்ணுக்கு இரங்கி அருள் செய்வான? * கிளே - கிளேக்கும்; பரவும். சேய் - செக்கிறம் உடையவன். கிரி - மலே: இங்கே கிரவுஞ்சமலே. அ : பண்டறி சுட்டு. கீண்ட - பிளந்த மதலே - புதல்வன். மாலுக்கும் திருவுக்கும் மருகன் என்றும் பொருள் கொள்ளலாம். திளே - இன்பம் நுகர்கின்ற, இளம் பொழில்வளம் மங்காத சோலே. முளே - முளேக்கின்ற, முளேபோன்ற இளமை யையுடைய எனலும் ஆம். பரிந்து - இரங்கி, சேய், ஆண்டகை, செல்வன், மதலே, மருகன், களிறு, முருகவேள் பரிந்து அருளுங் கொல் என்று வினைமுடிவு செய்க.) - - - இது சேந்தனர் திருவிசைப்பாவில் ஆருவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/92&oldid=825826" இலிருந்து மீள்விக்கப்பட்டது