பக்கம்:சித்தி வேழம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுவாஞ ? 85 மாளிகையை அமைத்துக்கொண்டு வாழ்கிருன. பூம்பொழிலில் அந்த மரத்தடியில் நிற்கும்போது அவனப் பார்த்தால் கொம்பு முளேக்கும் பருவத்திலுள்ள இளைய யானைக் குட்டியைப்போலத் தோன்றுகிருன். என்ன அழகு! என்ன அழகு! - - திளை இளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளை இளங் களிறு. - தன் பெண்ணே நினைக்கிருள். அவளும் நல்ல அழகி. அவளே அடிமுதல் முடிவரையில் வருணித்துக்கொண்டிருக்க நேரமேது? தலேமையான அழகு தலையழகு. அவள் கூந்தலழகி. அடர்ந்து மொய்த்த குழலே உடைய அவள் இளம் பெண்; சிறுமி. அழகும் இளமையும் உட்ைய அந்தப் பெண்ணே இளமை, அழகு, வீரம், அறிவு, செல்வம், குலம் ஆகிய எல்லாம் உடைய அவன் ஏற்றுத் திருமணங் கொண்டருளினால் எவ்வளவு நன்ருக இருக்கும்! தாய்க்குத் தன் பெண்ணே முருகனுக்கு மணம் செய்து கொடுக்கச் சம்மதங்தான். இது பாதிக்கல்யாணம் ஆனது போன்றது. ஆனல் மறுபாதியும் நிறைவேறில்ைதானே திருமணம் உண்மையில் நிகழும்: ஆம்: அந்தப்பிள்ளே, முருகவேள் என்னும் திருநாமம் உடைய பிள்ளே, இந்தப் பெண்ணின்மேல் இரக்கம் வைத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமே! அவனுக்குக் கிடைக்காத பெண் இல்லை. அழகும் இளமையும் உள்ள பெண்கள் எத்தனையோ பேர். ஆனாலும் இவள் அவனேயே கினேந்து வாடுகிருள். அதை நினைந்து இரங்கிப்பரிவுடன் இவளே ஏற்றுக்கொள்ள அவன் திருவுள்ளம் கொள்ளவேண்டும்; கொள்வாளு? - என் மொய்குழற் சிறுமிக்கு அருளுங்கொல், முருகவேள் பரிந்தே? ... முருகன் பெருமையையெல்லாம் எண்ணி மனம் களித்துத் தன் பெண்ணுக்கு ஏற்ற நாயகன் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/91&oldid=825825" இலிருந்து மீள்விக்கப்பட்டது