பக்கம்:சித்தி வேழம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சித்தி வேழம் வான். செல்வன் என்பதல்ை தான் விரும்புவதும் அவனிடம் உண்டு என்பதை உணர்த்தினுள். - . . இனிச் சுற்றத்தார், நல்ல குடும்பத்தில் உதித்தவன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். முருகனே இருமரபும் தூயவன். அவனுடைய தந்தையின் பெருமையும் தாய் மாமன் பெருமையும் உலகறிந்தவை. அவன் தந்தை சிவபெரும்ான்; வளைந்த இளம் பிறையைத் தன் சிவந்த சடையிலே அணிந்த பெருமான் தூய்மை தவிர்ந்து குறை யவும் வளரவும் சாபம் பெற்ற சந்திரனத் தன் திருமுடியிலே வைத்துத் தூய்மையுறச் செப்த கருணையாளன். வண் இளம் பிறைச் செஞ்சடைஅசன் மதக். - முருகனுடைய மாமன் நீலமேக சியாமள வண்ணம் படைத்த திருமால். கண்ணுக்குக் குளிர்ச்சி தருவது மேக நிறம். அதை யுடையவனுக்கு முருகன் மருகன். கார்திற மல் இரு மருகன். - இப்போது முருகனிடம் மணமகனுக்குரிய எல்லாம் நன்கு பொருத்தியிருப்பதை அறிந்து உவந்தாள் தாய். - 'பெண்விரும்பும் கால பிதாவிரும்பும் வித்தையே - எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாப்-நண்ணிடையே கூரிய சுற்றம் குலம்விரும்பும் காந்தனது - பேரழகு தான்விரும்பும் பெண்' - - என்பது ஒரு பழம் பாட்டு. அதில் சொல்லப்பெற்ற தகுதிகள் யாவும் முருகனிடம் அமைந்திருக்கின்றன. இவ்வளவு கலங்களையுடைய பெருமான் எட்டாத கொம் பிலே கிட்டாத கனியாக இருக்கிரு?ை இல்லை, இல்ல; இதோ அணிமையிலுள்ள திருவிடைக்கழியில்தான் இருக்கிருன். மக்களெல்லாம் வந்து உலாவித் தென்றலும் நிழலும் நறு மணமும் தீங்கனியும் நுகர்ந்து திளேக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழியில் குராமரத்தடியில் அவன் தன் i . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/90&oldid=825824" இலிருந்து மீள்விக்கப்பட்டது