பக்கம்:சித்தி வேழம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுவாளு ? $3 சிவந்த நிறம் பெற்றதனுல்தான் முருகனுக்குச் சேய் என்ற திரு நாமம் வந்தது. உரையாசிரியர்கள் சேய் என்று வரும் இடங்களில், பிள்ளை யென்று உரை எழுதாமல், சிவப்பு நிற முடையவன் என்றே எழுதுவார்கள். முருகன் தளிர்த்துக் கிளேக்கும் இளமையையும் அழகுச் சிவப்பையும் உடைய பெருமான். w கிளே இளம் சேய். அவனுடைய வீரம் எத்தகையது? கிரவுஞ்சம் என்னும் மலேயைப் பிளந்த ஆண்மையை உடையவன் அவன். ஒர் அசுரனே மலேவடிவாகப் பறந்தும் படிந்தும் தேவர்களுக்கும் மக்களுக்கும் இடர் விளேத்து வந்தான். அவனைப் பிளந்து வெற்றியை கிலே நாட்டிய ஆண்டகை முருகன். அவனுடைய வீரத்துக்கு அடையாளமாவும், வெற்றிப் போருக்குக் கருவி யாகவும் இருப்பது அவன் திருக்கரத்தில் உள்ள வேல். அது முருகன் திருக்கரத்தில் என்றுமே அழிவின்றி விளங்குவது. புறக்கண்ணுடையாருக்கு வீர வேலாகவும், அகக் கண்ணுடை யாருக்கு ஞான வேலாகவும் புலணுவது அது. அதுவே அவனுடைய வீரத்துக்கும் ஞானத்துக்கும் அறிகுறியாக விளங்குவது. அதை ஏந்திய அவன் பெருஞ் செல்வன். கிரிதனேக் ண்ேட ஆண்டகை கேடில் வேற் செல்வன். இப்போது மணப் பெண்ணுக்கும் தகப்பனுக்கும் தனக் கும் விருப்பமான இயல்புகள் யாவும் அவனிடம் பொருந்தி யிருப்பதை எண்ணிப் பார்த்துத் திருப்தி அடைந்தாள். பெண்ணுக்கு வேண்டியவையே எல்லாவற்றிலும் முக்கியம். கிளே இளம் என்பதல்ை இளமையும், சேய் என்பதல்ை அழகும், கிரிதனேக் கிண்ட ஆண்டகை என்பதல்ை வீரமும் தெரியவந்தன. கேடில் வேல் என்றது ஞானத்தைக் குறிப்பது ஆதலின் அவன் ஞானபண்டித சாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்தத் தகுதியைத் தந்தை விரும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/89&oldid=825822" இலிருந்து மீள்விக்கப்பட்டது