பக்கம்:சித்தி வேழம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுவான ? தாய் இப்போது முருகனுடைய இயல்பை எண்ணிப் பார்க்கிருள். தன் மகளுக்கு ஏற்ற மணவாளன் அவன் என்பதை அவள் நெஞ்சம் சொல்கிறது. உலகில் பெண்ணேப் பெ ற்றவர்கள் தம்முடைய பெண்களுக்கு வரன் பார்ப்பதாக இருந்தால் மணமகன் இன்னபடி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தந்தை, பிள்ளை அறிவுடையவனுக இருக்கவேண்டும் என்று விரும்புவான். தாயோ, செல்வகை இருக்கவேண்டும் என்று அவாவுவாள். மற்ற உறவினர்கள் நல்ல குலமாக இருப்பதை விரும்புவார்கள். மணம் புரிய, இருக்கும் பெண்ணுே, இளமையும் அழகும் வீரமும் உள்ள வகை இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்வாள். முருக னிடம் இந்தத் தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றை இப்போது எண்ணிப் பார்க்கிருள் தாய். பெண் எதை விரும்புவாளோ அந்தத் தகுதி அவனிடம் பரிபூரணமாக இருக்கிறது. இளமை, அழகு, வீரம் ஆகிய வற்றையே இளங்கை விரும்புவாள் என்பதைத் தாய் நன்கு அறிவாள்; அவளும் இளம் பெண்ணுக இருந்தவள்தானே? முருகனுடைய இளமை அவனுடைய திருமேனி முழு வதும் மெருகூட்டிக் கிளேத்திருக்கிறது. என்றும் இளைய பிரானகிய அவன் அழகோ கண் கொள்ளாதது. 'பிள்ளை கறுப்பா, சிவப்பா' என்று கேட்பது உலகியல். "சிவப்பு" என்ருல் திருப்தி உண்டாகும். இந்த இளைய பிள்ளை நல்ல சிவப்பு. "செங்கோட்டுப் பிள்ளே சிவந்த பிள்ளை' என்று ஒரு புலவர் பாடுவார். "செய்யன் சிவந்த ஆடையன்' என்பது திருமுருகாற்றுப்படை. சிவப்பு அழகுக்கு அடையாளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/88&oldid=825821" இலிருந்து மீள்விக்கப்பட்டது