பக்கம்:சித்தி வேழம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது அழகோ ? 81 (நெய்மணத்தைக்கொண்ட மறையோரும் வானவரும் உலகில் உள்ளவரும் உயிர் பிழைக்க, அடியேன் வாழ, உறுதியான மணி களாலான மாடங்களை யுடைய திருவிடைக்கழியில், அழகிய குரா மரத்தின் கிழவின்கீழ் எழுந்தருளிய, கூட்டமான பளிங்கை ஒத்த நீரையுடைய கங்கையின் புதல்வன், கணபதிக்குப் பின் வந்த தம்பி, குணத்தையும், கீல்மணி போன்ற சுருண்ட கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற வாயையும் உடைய இந்தப் பெண் படுகின்ற துன் பத்தைத் திருவுள்ளத்தில் கொள்ளாமல் இருப்பது அழகாகுமா? குணம்டத்தை, மணிக்குருளே மடந்தை, கொவ்வை வாய் மடங்தை என்று கூட்டிக்கொள்ள வேண்டும். மணி - நீலமணி. குருளே - சுருண்ட கூந்தல், மடந்தை என்பது பருவத்தைக் குறியா மல் பெண்ணென்னும் துணையாய் கின்றது. குறிக்கொளாதது. என்றது செய்யுள் விகாரத்தால் குறைந்து கின்றது. மணம் அணி - கெய் முதலியவற்றின் மணத்தைப் பெற்ற, வையம் - உலகத்திலுள் ளோர்: ஆகு பெயர். மற்று: அசைகிலே. அடியனேன் என்றது தாய் தன்னேயே கூறிக்கொண்டது. தினம் - திண்ணம்; இடைக்குறை: உறுதி யென்னும் பொருள் உடையது. மணி - நீல மணி, மாணிக் கம் முதலிய மணிகள். கணம் - கூட்டம். மணிபொரு - பளிங்கை ஒத்த கங்கையின் நீர் வெண்மையானது. இளங்கிளே - தம்பி.1 இது திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் 5-ஆவது திருப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/87&oldid=825820" இலிருந்து மீள்விக்கப்பட்டது