பக்கம்:சித்தி வேழம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சித் தி வே மும் தூயது; கூட்டமாகப் பளிங்கு கிடந்தால் எப்படி இருக்கும், அப்படி உள்ளது. அத்தகைய கங்கை யன்னேயின் புதல்வன் முருகன். எப்போதும் பெருங் கூட்டத்தின் நடுவே இருப்பவன் கணபதி. எத்தகைய தடைகளேயும் போக்கி எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகச் செய்பவன். அவனே வணங்காதவர் யாரும் இல்லை. அத்தகைய பெருமானுக்குப் பின் வந்த தம்பி இப்பெருமான். - இவ்வளவு சிறந்த அண்ணல், உலகத்தினர் வாழ உலகில் வந்து இக் கோயிலில் வாழ்கிருன். அவன் கருணேயை அள விட முடியுமா? மறையோர் உய்ய, வானவர் உய்ய, வையம் உய்ய-ஏன், இந்தத் தாயே வாழ-வந்து எழுந்தருளிய வள்ளல், இந்த மடந்தைக்கு உண்டான இடரை எண்ணுமல் இருக்கலாமா? எங்கோ இருப்பவன்; ஆதலால் தெரியாது’ என்று சொல்ல வகையில்லே. அவன் எங்கே யிருப்பினும் அறியாதது ஒன்றும் இல்லை; இங்கே அருகிலேயே எழுங் தருளி யிருக்கிருன், - - தன்னல் யாவரும் வாழ்வு பெறவேண்டும் என்று இறங்கி வந்தவன் ஓர் இளம்பெண் வாழ்வு பெருமல் ஏங்கு கிருள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? இது அவனுக்கு அழகா?-தாயின் சிந்தனே இவ்வாறெல்லாம் படர்ந்தது. - r. - . குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படும் இடர் குறிக்கொளா தழகோ? மணம்அணி மறையோர் வானவர் வையம் உய்யமற்று அடியனேன் வாழத் தினமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற கண்மணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன், கணபதி பின் இளங் கிளேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/86&oldid=825819" இலிருந்து மீள்விக்கப்பட்டது