பக்கம்:சித்தி வேழம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது அழகோ? 79 குணமணிக் குருளேக் கொவ்வைவாய் மடந்தை படும் இடர் குறிக்கொளா தழகோ? மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்யமற்று அடியனேன் வாழத் தினமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற... இவ்வாறெல்லாம் எண்ணுகிருள் முருகனிடம் காதல் பூண்ட மங்கையின் தாய். திருவிடைக்கழியில் குராமரத்தினடியில் எழுந்தருளியிருக் கும் முருகன் தனக்கு வேறு இடம் இல்லாமையிலைா அங்கே வந்திருக்கிருன்? அன்று, அன்று; உலகம் உப்யவேண்டும் என்று வந்திருக்கிருன். வந்து கோயில்கொண்ட இடம் தாழ்ந் ததா? உறுதியான, திண்ணமான, மணி மாடங்கள் உள்ள அழகிய ஊர் திருவிடைக்கழி, மறையோரும் பிறரும் அந்த மாடங்களில் வாழ்கின்ருர்கள்; அங்கே தனக்கும் ஒர் இருக் கையைக் கொண்டு உறைகிருன் முருகன்; நல்ல மரநிழல் அடர்ந்த இடத்தில் எழுந்தருளியிருக்கிறன். மனிதர்கள் வாழும் இந்த இடத்தில் வந்து தங்கி யிருப் பது, அவனுடைய கருணேயினலே. பெரிய மனிதர்க்ளே உறவாகப் பெற்றவர்கள் தமக்கு ஒரு பெருமை இல்லாவிட் டாலும், அந்த உறவினர்களின் பெருமையை கினேந்து செருக்கடைவது உலக இயல்பு. முருகன் எவ்வளவோ உயர்ந்த உறவினர்களைப் பெற்றவன்; அத்தகையவன் இங்கே வந்து நம்மோடு ஒருவகை வாழ்கிருன். எவ்வளவு எளிய பண்பு அவன் ஐ. றவினர்கள் யார் தெரியுமா? கங்காதேவியின் குமரன் அவன்; காங்கேயன் என்பது அவன் பெயர்களில் ஒன்று. அவனத் தன் அலேக்கரங்களால் தாங்கிப் பெரு மிதமும் மகிழ்ச்சியும் கொண்டவள் கங்கை. கங்கை தூய்மைக்கு உறைவிடம். கங்கையின் நீர் பளிங்குபோலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/85&oldid=825818" இலிருந்து மீள்விக்கப்பட்டது