பக்கம்:சித்தி வேழம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சித்தி வேழம் அதுபோல இறைவனுடைய அரசாங்கத்தில் அமரர்கள் மக்க ளுக்கு நலம் செய்யும் அதிகாரிகள். அவர்களுக்கு மறைய வர்கள் அக்கினி காரியம் செய்து ஆகுதி கொடுத்து உண வளிக்கிருர்கள். வேள்வித்தி எழுப்பி நெய்யும் அவியும் சொரிந்து தேவர்களை வழிபட்டு அவர்களைத் திருப்திப்படுத்து கிருர்கள். அவர்கள் செய்யும் வேள்விகளால் தேவர்கள் மகிழ்ந்து உலகம் வாழத் தாம் செய்ய வேண்டியவற்றைச் செய்கிருர்கள். வேள்வி செய்யும் அந்தணர்கள் நீர் நாண செய் சொரிந்து தி வேட்கிருர்கள். அவர் கையும் உடலும் கெய் மணக்கின்றன. அந்த மணத்தை அணிந்த மறையோரை முருகன் காப்பாற்றுகிருன். "அந்தணர் வெறுக்கை" என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. முருகன் தானே இவ்வுல கிற்கு வந்து மூர்த்தீகரித்து ஆலயங்களில் எழுந்தருளியிருக் கிருன். அவனே வணங்கி வேள்வி செய்து வாழ்கிருர்கள் அந்தணர்கள். அவர்கள் வாழ, வேள்வி மல்குகிறது. அதனல் தேவர்கள் வாழ்கிருர்கள். அவர்கள் வாழ, மழை காலத்தில் பெய்கிறது: காற்றுப் பருவத்தில் வீசுகிறது. அதனல் வையத்திலுள்ள மக்கள் வாழ்கிருர்கள். - - இவ்வளவும் ஒன்றை ஒன்று தொடர்ந்து நடைபெறுகின் றன. முருகன் பூவுலகில் திருவிடைக்கழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதனால் நெய்மணத்தை அணியும் மறையோர் உய்கிருர்கள்; அவர்களால் ஆகுதி பெறும் வான வர் உய்கிருர்கள்: அவர்களால் வையம் உய்கிறது. அது மட்டோ? அந்தத் தாய் வாழுவதே முருகப்பெருமான் திருவரு ளால்தானே? தன் மகளைப் புறக்கணித்துவிட்டான் என்பதற் காக உண்மையை மறைத்துப் பேசலாமா? அந்தப் பெரு மான்கம் அருகே வந்து எழுந்தருளியிருக்கிருன்என்றதைரியத் தால் அந்தத் தாய் எத்தனையோ இடர்ப்பாடுகளே வென்றிருக் கிருள். அதை எளிதில் மறக்கமுடியுமா?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/84&oldid=825817" இலிருந்து மீள்விக்கப்பட்டது