பக்கம்:சித்தி வேழம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது அழகோ? தன் மகளேத் தாய் பார்த்தாள். அவள் வாட்டமுற்றுக் கிடந்தாள். மான்குட்டி போலத் துள்ளி விளையாடிச் சிரிப் பும் பாட்டுமாகக் கலகலப்பாக இருக்கும் பெண் அவள். இப் போது ஏக்கமே உருவமாகச் சோர்ந்து கிடக்கிருள். ஊரெல் லாம் பாராட்டும் குணம் நிறைந்தவள் அவள் அழகுக்குத் தான் குறைவா? அவளுடைய கூந்தல் நீல மணிபோல இருக் கும்; சுருள் சுருளாக இருக்கும். இப்போது அதை வாரிக் கொள்ள கினேயாமல் கிடக்கிருள் அவள். அவள் வாய் கொவ்வைக் கனிபோல இருக்கிறது. அவள் என்ன கினைந்து வருந்துகிருளோ? அவள் படும் இடரைத் தாயில்ை நன்கு அறிய முடியாது. ஆல்ை அந்தப் பெருமான் அறிய முடி யாதா? இப்படிக் கவனிக்காமலிருப்பது அவனுக்கு அழகா? அவன் மக்களுடைய இடரைக் கவனிக்காமல் இருப்ப பவன் அல்லவே! பேசாமல் சுகமாகக் கந்தலோகத்திலே இருந்துவிடலாம் அவன். அப்படி இருந்தால் பலருக்குப் பயன் விளேயாமல் போய்விடும். யாவரும் உய்யவேண்டுமானல் அவர்கள் காண அருகில் வந்து வாழவேண்டும். அவன் அப் படிச் செய்கிருன். ‘. . . . உலகில் உள்ளவர்கள் வாழவேண்டுமானல் அவர் களுக்கு வேண்டிய மழை, காற்று, தி முதலியன வெல்லாம் வுேண்டிய போது வேண்டிய அள்வு கிடைக்க வேண்டும். அவற்றை வழங்கும் சக்தி உடையவர்களே தேவர்கள். அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு நலம் செய்வார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தில் சம்பளம் கிடைக்கிறது. அந்தச் சம்பளத்தை அவர்களுக்குக் கொடுப் பதை நிறுத்திவிட்டால் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/83&oldid=825816" இலிருந்து மீள்விக்கப்பட்டது