பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

அப்படியெல்லாம் பேசுகின்ற பொழுது, குழந்தைக்கு என்ன வயது - நாம் சொல்லுவது குழந்தைக்கு விளங்காதே ---என்றெல்லாம் தகப்பன் நினைப்பதில்லை. அன்பு மிகுதியினால், குழந்தையைப் பார்த்துப் பலப்பல பேசுகின்றனர். அப்படிப் பேசுவது தந்தையின் தலைசிறந்த அன்பு பாசத்திற்கு அடையாளமாகும். குழந்தைக்குத் தகப்பனுடன் உரையாடுகின்ற ஆற்றல் இல்லை என்று தகப்பனுக்குத் தெரிந்தாலும் பெருகி வருகின்ற அன்பு, பேசவைக்கிறது. அப்படியே தாயாரும்.

தெய்வ சந்நதி

தெய்வ சந்நிதானத்தில் நிற்கின்றபொழுது அவ்வாறு மனம் திறந்து பேசவேண்டும். அங்கே இருப்பது ஒரு கற்சிலை என்று நினைக்கக்கூடாது. தெய்வமே நம்மிடத்தில் பேசுவதற்கு வந்துள்ளதாகக் கருதி நாம் பேச வேண்டும். குழந்தைகளிடத்தில் எதனையும் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்ற தகப்பனுக்கு அன்பு பெருகி வருவதுபோல், தெய்வ சந்நிதானத்திலும், நேருக்கு நேரே உரையாடுகின்ற பக்குவம் இறை அருளினை விரைந்து பெருகுவதற்கு வழி செய்வதாகும். ஆதலால் தான் குழந்தையினையும், தெய்வத்தினையும் ஒன்றுபடுத்தி "குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்" என்ற சிறந்த பழமொழி மக்களிடையே வழங்கி வரலாயிற்று. சுருக்கமான விளக்கம்;

மனத்தினை அடக்கி வைத்து, அதற்கு அடிமையாகாமல் வளர்ந்து வருபவர்களே தவமுனிவர்கள் ஆவார்கள்.

மனம் எனப்படுகின்ற நெஞ்சம் உண்டாக்குகின்ற துன்பத்தினை எடுத்துரைத்து அதனைக் கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் படைத்த. அறிவு எப்படிப் பேசுகின்றது என்பதனை மகான் தாயுமான சுவாமிகள் எளிமையாக ஒரு பாடலில் அமைத்துக் காட்டுகின்றார் -- அறிவு என்பது