பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123



"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்றார் திருவள்ளுவர்.

அதாவது, தாய் தகப்பன் வைத்த பெயரோடு போகாமல், ஊரில் இருப்பவர்கள் நமக்குப் பெயர் வைக்க வேண்டும். அது தான் “எவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்...

மேலுலகம்

இங்கேயிருந்து குடும்பத்தோடு வாழ்ந்துவிட்டு ஒருவர், 'தேவலோகம்' போனார்.

அந்த வானுலகத் தெய்வம், "நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டது.
"நான் பூலோகத்திலிருந்து வருகிறேன்!
"உங்க அப்பா உங்களுக்கு என்ன பெயர் வைத்தார்!
"எங்க அப்பா எனக்கு காந்தி என்று பெயர் வைத்தார்!
"மக்கள் என்ன பெயர் வைத்தார்கள்?"
"மக்கள் என்னை 'மகாத்மா' என்றார்கள்....!
"சரி, நீங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். பக்கத்தில் உட்காருங்கள்...
இன்னொருத்தர் வந்தார். அவரைப் பார்த்து தெய்வம் கேட்டது.
“எங்க அப்பா சிதம்பரம் என்று பெயர் வைத்தார்!
"மக்கள் என்ன பெயர் வைத்தார்கள்?"