பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

'ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்று சொல்லுகிறார். நல்ல காலத்தை நினைத்து ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டால், இந்த உலகம்கூட நம் வசப்படும் என்று சொல்கிறாரென்றால் இந்தக்காலம் எவ்வளவு இன்றியமையாதது,முக்கியமானது என்பது விளங்கும். "காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்" என்றும் சொல்லுகிறார். நல்ல காலம் வருவதற்காகக் காத்திருப்பவர்கள் என்றுகூட ஒரு குறிப்பைக் காட்டுகிறார்.

கேள்விகள்

சாதாரணமாக ஒருவரிடம் கேள்வி கேட்கும்போது கூட காலத்தை வைத்துத்தானே, நேரத்தைப் பார்த்துத் தானே கேள்வி கேட்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஒருவரைப் பார்த்தால், காபி சாப்பிட்டீங்களா?" என்று கேட்கிறோம். அந்த நேரத்திலே அதைத்தான் கேட்கணும். மத்தியானம் ஒரு மணிக்கு "சாப்பாடு சாப்பிட்டீங்களா?"ன்னு கேட்கிறோம். அவரையே சாயந்திரம் பார்த்தால், "சிற்றுண்டி சாப்பிட்டீங்கனா?” ன்னு கேட்கிறோம். இரவிலே பார்த்தால், “என்ன... ஆகாரம், ஆய்ட்டுதா?ன்னு கேட்கிறோம். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒருத்தரை எழுப்பி, காபி சாப்பிடறீங்களா?'ன்னு யாராவது கேட்பாங்களா? கேட்டால் "ஏண்டா, நேரங்கெட்ட நேரத்திலே கேட்கறே? என்று பளாரென்று கன்னத்தில் அறைவான்.

இருபத்தைந்து முப்பது வயதுப் பையனைப் பார்க்கிறோம். ““ஏண்டா ...? தம்பி... உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?'ன்னு கேட்கிறோம். ஏன்..? அது கல்யாணமாக வேண்டிய காலம். எழுபது வயது தாத்தாவைப் பார்த்தால், உடம்பு எப்படியிருக்கு? என்று கேட்கிறோம் . ஏனென்றால், அவர் பயணத்தில் இருக்கும் நேரம்! அந்தச் சமயத்திலே கேட்க வேண்டிய கேள்வி இது.