பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இறைவன் என்றும் சொல்லப்படும். இயற்கையே இறைவன் என்று சான்றோர்கள் சொல்லி வருகிறார்கள். இயற்கையின் சட்டமே முதன்மையான சட்டம் ஆனபடியால் அதனைத் 'தலைவிதி' என்று சொல்லுகிறோம். 'தலை' என்பதற்கு முதன்மையானது என்று பொருள் ஆகும்.

பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற வினைகளின் பயனாகப் பல செயல்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. தொடர்ந்து வருகின்ற வினைப் பயன்களை மூன்று வகைகளாகப் பிரித்துப் பேசுவார்கள்.


மூன்று வினைகள்


அந்த மூன்றினையும் வட மொழியில் ஆகாமியம்-----சஞ்சிதம்-----பிராரத்வம் என்று கூறுவர். தமிழ்மொழியில் இவைகளை எச்சவினை----வருவினை-----நிகழ்வினை என்பர். இப்போது இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பதை. பிராரப்தம் என்றும் எஞ்சி இருப்பதை 'ஆகாமியம்' என்றும், இனிமேல் வரப்போகும் வினைப் ..யன்களைச் சஞ்சிதம் என்று கூறுவார்கள்.


வினைப் பயன்களின் நுட்பங்களை எல்லாம் முதிர்ந்த, ஞான அனுபவம் பெற்ற பெரியவர்களின் வாயிலாகத் கேட்டறிதல் நல்லது. ஒவ்வொரு பிறவியிலும் செய்யப்படுகின்ற வினைப் பயன்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

செய்யப்படுகின்ற வினைகள் எல்லாம்----நல்வினை---தீவினை---என இருவகையினுள் அடங்கும், இந்த வினைகள் எல்லாம் அனுபவிப்பதற்குரிய பக்குவம் அடைந்த பிறகு தான் செய்தவனை வந்து சேரும். அதுவரையில் அவைகள் எஞ்சியவை களாக இருந்து கொண்டிருக்கும். அவைகளைத் தான் எச்சவினை என்று கூறுவார்கள்.