பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

மாக, அமைந்திருக்க இரத்தலை செய்பவன் கோபம் (வெகுளாமை) கொள்ளாதிருக்க வேண்டும் என்று குறட்பா ஒன்று நன்கு தெளிவுபடுத்துகிறது.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.


குறிக்கோள்

மனித வாழ்க்கையில் அமைதியாக இருந்து நற்பணிகள் புரிந்து மற்றவர்களுக்கும் பயன்பட்டு வாழ்வதே உயர்ந்த. குறிக்கோளாக இருத்தல் வேண்டும், உயர்ந்த வாழ்க்கையினை மேற்கொண்டு வாழ்வ தற்கு உயர்ந்த குணங்கள் தான் அடிப்படையாக இருத்தல் வேண்டும். "குணம் என்னும் குன்றேறி நின்றார்" என்பது திருவள்ளுவர் வாக்கு. மனிதப் பிறவி எடுத்தும் உயர்ந்த மனிதத் தன்மைகள் இல்லாமல் தீய குணங்களைப் பழகிக் கொண்டிருப்பவர்கள் தாங்களும் துன்பகரமான வாழ்க்கையினை லாழ்வதோடு அல்லாமல் மற்றவர்களுக்கும் தீமை செய்பவர்கள் ஆவார்கள்.

நல்ல பண்பு உள்ளவர்களாக வாழ்வதையே மனிதக் குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு வாழ்க்கையினை நல்ல முறையில் நடத்த சிந்தனையைத் தூண்டுவதாக. பேச்சு வழக்கில் இருக்கின்ற பல பழமொழிகள் வழிகாட்டிகளாக அமைந்திருக்கின்றன.

புத்தி

“பிச்சைக்கார புத்தி" என்பதாகப் பேசப்படுகின்ற 'பேச்சினை நாம் கேட்டு வருகின்றோம். இந்தப் பேச்சினை பழமொழி போன்றதொரு கருத்தாகக் கொண்டாலும் தவறில்லை. பலபேருக்கு 'பிச்சைக்காரப் புத்தி' என்பதற்கு அர்த்தம் தெரியாமல் இருக்கிறது. எத்தனையோ நமக்குத்