பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வரக்கூடாது. பொதுவாக எல்லோருக்குமே கோபம் என்பது தீமையினை விளைவிக்கும் ஒன்றாகும். இருந்தாலும், சில நேரங்களில் கோபம் வந்தாலும் தாங்கிக் கொள்வதாக அமையலாம். ஆனால், யாசிப்பவர்க்கு. (இரப்பவர்க்கு) கோபம் என்பது அறவே வருதல் கூடாது. பிச்சை எடுப்பவனைப் பார்த்து திருவள்ளுவர் சொல்லுகிறார், "யாசகம் செய்பவனே, மற்றவர்களுக்கு சில நேரங்களில் கோபம் வந்தாலும் கவலை இல்லை, பிச்சை எடுக்கிற உனக்குக் கோபமே வரக் கூடாது."

இவ்வாறு திருவள்ளுவர் சொன்னவுடன் அந்தப் பிச்சைக்காரன் (இரப்பவன்) திருவள்ளுவரைப் பார்த்துக். கேட்கிறான், "எனக்கு மட்டும் கோபமே வரக்கூடாது என்று திட்டவட்டமாகச் சொல்லுகின்றீர்களே, ஏன்? இவ்வாறு கேட்ட அவனுக்கு திருவள்ளுவர் சொல்லுகிறார், "அடே! பிச்சை எடுப்பவனே, கோபம் வந்துவந்துதான் நீ இந்த நிலைக்கு வந்து விட்டாய்.

கோபத்தினை ஒருவன் கொள்கையாகவே வைத்திருந்தால் அந்தக் கோபம் அவனை வறுமைக்கு ஆளாக்கி (நித்திய தரித்திரனாய்) பிச்சை எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டுவிடும். கோபம் என்ன செய்யும் என்பதற்கு இந்த வறுமையே போதிய கரியாகும் (சாட்சி யாகும்). ஆகையினால் இனியும் யாசிப்பவன் கோபத்தைக் கொண்டால் வேறு எந்த நிலைக்குப் போக முடியும்? வாழ்க்கையில் பிச்சை எடுப்பது என்பது கடைசிக் கட்டமாகும். அவனை அந்த நிலைக்குக் கொண்டு சேர்த்ததற்கு. முதல் காரணம் கோபம் என்பதே ஆகும்.

அவ்வாறு கடைசி கட்டத்திற்கு வந்தவன், மேலும் கோபத்தினைக் கொள்வானேயானால் எந்த துன்பத்திற்கு, ஆளாவானோ என்று ஆசிரியர் சிந்திக்க வைக்கின்றார். நாள்தோறும் 'வறுமையால் துன்பப்படுகிறவனுக்கு அந்த, நிலையை போதுமான சான்றாக -- சாட்சியாக -- காரண