பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

மாக வைத்துக்கொள்ள ஆயத்தம் செய்தார். காட்சிக்கு அழகாக இருக்குமாறு செய்தார். தூய்மையான இருப்பினை உட்காருகின்ற இடத்தில் விரித்து வைத்தார்.

வீட்டிற்குள் நுழைகின்ற வாயிற்படியினைச் சுத்தம் செய்து அழகாகக் கோலம் இட்டு கவர்ச்சியாக அமைத்தார். இன்னும் எவ்வளவு தூய்மையும் அழகும் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வைத்தார். தன்னுடைய நகரத்தில் இருக்கின்ற பெரிய மனிதர் தம் வீட்டிற்கு வருவதற்கே இவ்வளவு தூய்மைப்படுத்துகிறோம் என்றால், எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் வந்து உறைய வேண்டும் என்றால், இந்த மனத்தினை எவ்வளவு தூய்மையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும். தீய எண்ணங்கள் கடுகளவேனும் உள்ளத்தில் இல்லாதபடி இருத்தல் வேண்டும் அல்லவா?

பெரிய மனிதர் வருவதாகச் சொன்ன அந்த வீட்டின் முன் பக்கத்திலேயே குப்பைகளையும், கூளங்களையும் பரப்பிவைத்து வீட்டையும் வெறுக்கத்தக்க மாதிரி வைத்திருந்தால் வீட்டிற்குள் நுழைவதற்குத் தான் அந்தப் பெரியவருக்கு எண்ணம் வருமா? அதுவே போல் உள்ளத்தினை தீய எண்ணங்கள் இல்லாதபடி பார்த்துக் கொண்டால்தான் இறைவன் வழிபாடு என்பது உண்மையாக இருக்க முடியும்.

தேடிவரும்

சித்தர்களில் ஒருவர் பாடுகின்ற பாடல் எளிமையாக பல உண்மைகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

"பூவும் வேண்டாமே! பழமும் பொறியும் வேண்டாமே,
மேவிள் உள்ளன்பே தேவி விரும்பும் நல்லமுதாம்

குருடர் கூடி நின்று கற்பூரம் கொளுத்திக் காட்டுவதால், சிறிதும் நன்மையுண்டோ ? இதனைச் சிந்தனை
செய்வாயே