பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

9


சமதர்மமும் வேறு வேறு கட்சிகளராக இருப்பானேன். அது முறையல்லவே. படை பலமே சிதறுமோ என்ற கவலை மட்டும் அவருக்கு இருந்தது என்று கூறலாம். அதுவன்றி, அவருடைய பெயர் மங்கியது பற்றி நாம் மனம் வருந்துகிறேமேயன்றி அவர் அது பற்றி எண்ணியிருப்பார் என்றோ ஏங்கி இருப்பார் என்றோ எண்ணவில்லை. அந்த அஞ்சா நெஞ்சனுக்கு 'பூர்ஷுவா' உலகில் மதிப்புக் கிடைக்காது; கிடைக்கவில்லை-கிடைக்காததே அவருடைய மாத்துக் குறையவே இல்லை என்பதற்குச் சிறந்த அடையாளமுங்கூட.

இந்திய உபகண்டம், ஏகாதிபத்திய இரும்புப் பிடியிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன்னணி வீரர்களில், மா. சிங்காரவேலர் முதல் வீரர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப்பாய்க் கலகம் 1857-ல் கடந்தது. சிறுவன் சிங்காரவேலவனுக்கு, அந்த கலகம் காலத்துச் சம்பவங்களையே, வீட்டாரும் ஊராகும் கூறியிருப்பார்கள், பொழுதுபோக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காவோ! கம்பெனிக்காரனைச் சிப்பாய்கள் எதிர்த்தனர், எதிர்த்தவர்களை வெள்ளைக்காரர் சுட்டனர் என்று சிறுவயதிலே அவர் கேள்விப்பட்டிருப்பார். நமது காலத்தைப்போல, கவர்னர் ஜெனரலின் கனிவு- கோகலேயின் தெளிவு-முதல் சீர்திருத்தத்தின், அழகு-என்பன போன்றவைகளை அல்ல, அவர் சிறுவராக இருக்கும்போது கேட்டது. நாம், அடிமைத்தனத்திலே நாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே