பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


விடவா வேறு உள்ளது? நோய், வறுமை, பஞ்சம், புயல், வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பளங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுனை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத் பாந்தவன் அன்பன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடிமா சமணர்களைக் கழவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிறிஸ்தவரும் முஸ்லீலும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனை கோவில்கள் கட்டிடங்கள் இடிந்தன. எத்தனை நாடுகள் நகரங்கள் நாசமாயின.?"

இவ்விதமாக, எதிரி திணரும்படியான கேள்விகளைப் பச்சை பச்சையாகக் கேட்பார் மா. சிங்காரவேவர். அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருடைய இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திய போது, நாடே அதிர்ந்தது. சர்க்காரும் நடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை அவர்கள் கைபிடித்து இழுத்து மாஸ்கோவுக்கு அழைத்தனர்.