பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

17


உண்டு. மார்க்கீசத்தைக் கரைத்துக் குடித்து எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்கார வேலருமேயாகும். தோழர் சிங்காரவேலர் சுயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக்காரனும் மறக்ககாட்டான்.

எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு. இது கிடைக்கவிடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும், அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார்.

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினர். அவருடைய தீவிர வாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர் என்று கூறினர்; அவர் அதனை ஏற்றுக் கொண்டார்; சென்னையில் நாத்தீகர் மாநாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு, பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்களைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

'உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி? பாசுவைப் புலி பிடித்துத் தின்னவும், தேரையைப் பாம்பு பிடித்துத் தின்னவும் யார் கட்டளையிட்டார்? இந்தக் கொடூரக் காட்சியை