பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சுற்றுலா

11



வேலையை தொழில் என்கிறோம். தொழில்தான் வாழ்க்கைக்குத் துணையாக வருகிறது.

தொடர்ந்து வரும் துணையான தொழிலை நாம் எதிர் பார்த்திருக்க மாட்டோம்! ஏன்! நாம் விரும்பியது ஒன்று.

நம் தலையிலே கட்டப்பட்டது இன்னொன்று!

என்றாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக் கிறது!

வயிறு கழுவ மட்டுமல்ல! வருமானம், அவமானம் இன்றித் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழவும்தான். அன்புக் குரியவர்களே, இரத்த பாசங்களை, பாசபந்தங்களின் பிரதிபிம்பங்களை வளர்க்கும் பணிக்கு அடித்தளமாக, ஆதாரமாக இந்த வேலையே உதவுகிறது.

அத்தகைய ஆருயிர் தொழிலில், அன்றாடப் பணியில்தான் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

பிடிக்காத வேலையாக இருக்கலாம். பிரச்சினை அது அல்ல! ஒரு வேலையில் இருக்கும்வரை, நாம் வேலை செய்தே ஆக வேண்டும். வாழ்க்கையை வாழ்வதுபோல, வாழ முயற்சிப்பது போல. -

இந்தத் தொழிலிலிருந்து வேறு வேலைக்குப் போகும் வரை, தொடர்ந்து பணியாற்றும் வரை, தூய்மையுடன் பணியை செய்ய வேண்டும். செய்தாக வேண்டும்!

தூய்மையாக செய்யும் பணிக்கு, அந்தத் தொழிலில் நம்பிக்கை வேண்டும். அமமா