பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




சக்தியின் பெருமை புரியாமல், தூங்கித் தொலைக்கலாமா? சோம்பிப் பொழுதைக் கழிக்கலாமா? இன்று இருக்கும் வேகம் நாளை இருக்கும் என்பது என்ன நிச்சயம்? -

'நாமும் பயன் பெறுவோம், நாட்டுக்கும் பயன் டுவோம்’ என்று சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா!

குடம் காலியான பிறகு குதித்து என்ன பயன்? தன்னையே கோபித்துக் கொள்வதில் என்ன லாபம்! கையில் இருக்கும் பொழுது, கவனத்துடன் காரியம் ஆற்றுபவர்களே இன்பம் அடைகிறார்கள். புகழ் பெறுகின்றார்கள். இணையில்லாத சரித்திரம் படைக்கின்றார்கள்.

இருப்பதை பயன்படுத்தத் தெரியாதவனுக்கும் எதுவுமில்லாத அடிமரத்துக்கும் என்ன பேதம் உண்டு?

நமக்குத் தெரியாமல், இந்த உலகில் நம்மையறியாமல், நாம் வாழ வந்துவிட்டோம்! வாழ்ந்துதான் ஆகவேண்டும்!

ஏற்கனவே வந்தவர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகிற்கு வரப்போகிறவர்களை, வந்திருப்பவர்கள் வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வந்தவர்கள், வருபவர்கள், எல்லோரும் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் ஒரு பிடிப்புடன் வாழ்ந்தே ஆக வேண்டும்!

வாழ வேண்டும் என்றால் வருமானம் வேண்டுமே! ஏதாவது ஒரு வேலை செய்துதான் ஆகவேண்டும்!