பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சுற்றுலா

13




2. நானே நான்


அது ஒரு வித்தியாசமான வகுப்பறை, மரத்தடியில் நடக்கும் வகுப்பு. கருத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வகுப்புக்கு வந்து கவனத்துடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள்.

விணே பொழுதை போக்கி விடாமல், விருப்பத்துடன் கற்றுத் தரவேண்டும் என்ற மனத்துடன் ஆர்வமாக முன்னே வந்து நிற்கும் ஆசிரியர்.

ஆசிரியர் இன்னும் வகுப்புக்கு வரவில்லை. அவர் கேட்ட கேள்விக்கு விடை எப்படி அளிப்பது என்பதுபற்றி மாணவர்களுக்கு இடையே ஒரு பிரச்சினை தலைக்காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆசிரியர் வந்ததும் பதிலைக் கேட்பாரே! எப்படி சொல்வது என்ற யோசனைக்குள்ளே நீந்தி நிலைமாறிக்கொண்டிருந்தார்கள் அந்த மாணவர்கள்.

ஆசிரியரும் வகுப்புக்கு வந்துவிட்டார். மீண்டும் அமைதியே அங்குநர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறது.

'நேற்று நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும், நரகம் மோட்சம் பற்றியெல்லாம் நேற்று விரிவாகக் கூறினேன், அந்த இன்ப உலகத்திற்குப் போவதற்கு யார் யார் தகுதியாளர்கள் என்பதுபற்றியும் கூறினேன். இப்பொழுது நீங்கள் யார் யார் அந்த குணங்களைப் பெற்றிருக்கின்றீர்கள்? யார் யார் என்று அறிய நான் விரும்புகிறேன்' என்று ஆசிரியர் வகுப்பை ஆரம்பித்தார்.